நகைச்சுவை நடிகை வித்யூ லேகாவுக்கு டும்..டும்..டும்... மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..? Description: நகைச்சுவை நடிகை வித்யூ லேகாவுக்கு டும்..டும்..டும்... மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..?

நகைச்சுவை நடிகை வித்யூ லேகாவுக்கு டும்..டும்..டும்... மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..?


நகைச்சுவை நடிகை வித்யூ லேகாவுக்கு டும்..டும்..டும்... மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..?

பிரபல நகைச்சுவை நடிகை வித்யூ லேகாவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. மாப்பிள்ளையோடு, இவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

நகைச்சுவை நடிகை வித்யூ லேகாவிற்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. வளர்ந்துவரும் பெண் நகைச்சுவை நடிகை இவர். கடந்த 2012ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி பாடல்கள் சூப்பர், டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் ‘நீ தானே என் பொன்வசந்தம்’ இந்தப்படத்தின் ஹீரோயின் சமந்தாவுக்கு தோழியாக வருபவர் வித்யூலேகா. இவர் பிரபல காமெடி நடிகர் மோகன் ராமனின் மகள். தொடர்ந்து வீரம், வேதாளம் படங்களிலும் நடித்திருக்கும் இவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். சோசியல்மீடியாவிலும் அம்மணி செம ஆக்டீவாக இருப்பார்.

செம குண்டாக இருக்கும் இவர் தன் உடல் எடையை இப்போது கணிசமாகக் குறைத்திருக்கிறார். அம்மணி செம எக்சஸைஸ் செய்து, டயட் இருந்து உடலைக் குறைத்திருந்தார். அது முழுக்க திருமணத்துக்காகத்தான் என்பது இப்போது தெரியவந்துள்ளது. ஆம்..இந்த கரோனா காலத்தில் நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்து சஞ்சய் என்பவருடன் வித்யூலேகாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்த புகைப்படங்களை வெளியிட்டு, விரைவில் கல்யாணம் குறித்த தகவல்களை வெளியிடுகிறோம் என தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அம்மணி வெளியிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது.


நண்பர்களுடன் பகிர :