மூடிட்டு உன் வாழ்க்கையைப் பாரு... விமர்சித்த ரசிகருக்கு தன் ஸ்டைலில் பதில் சொன்ன வனிதா விஜயகுமார்..! Description: மூடிட்டு உன் வாழ்க்கையைப் பாரு... விமர்சித்த ரசிகருக்கு தன் ஸ்டைலில் பதில் சொன்ன வனிதா விஜயகுமார்..!

மூடிட்டு உன் வாழ்க்கையைப் பாரு... விமர்சித்த ரசிகருக்கு தன் ஸ்டைலில் பதில் சொன்ன வனிதா விஜயகுமார்..!


மூடிட்டு உன் வாழ்க்கையைப் பாரு... விமர்சித்த ரசிகருக்கு தன் ஸ்டைலில் பதில் சொன்ன வனிதா விஜயகுமார்..!

விஜயகுமாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துப்போட்ட வனிதா விஜயகுமாரை அவரது ரசிகர் ஒருவர் டேமேஜ் செய்யும் அளவுக்கு விமர்சனம் செய்திருந்தார். இதில் பதிலுக்கு தன் ஸ்டைலில் தடாலடி பதில் சொல்லியிருக்கிறார் பிக்பாஸ் புகழ் வனிதா. இதுகுறித்து தெரிந்துகொள்ள டொடர்ந்து படியுங்கள்.

விஜயகுமாரின் மகள் வனிதா, சந்திரலேகா படத்தில் இளையதளபதி விஜய்க்கே ஜோடியாக நடித்திருந்தார். அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் காட்டிய வில்லத்தனத்தில் தமிழகமே கடுப்பானது. அந்த அதிருப்தி அடங்குவதற்குள் பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்துகொண்டு வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். இதனிடையே பீட்டர் பாலின் முதல்மனைவி எலிசபெத்தின் பஞ்சாயத்தும் ஓடுகிறது. இவைகளுக்கு மத்தியில் பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி வந்து சிகிட்சை பெற்று திரும்பியது தனிக்கதை!

விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவியும் தேவதையை கண்டேன் உள்பட சிலபடங்களில் ஹீரோயினாக நடித்தார். அதேபோல் விஜயகுமாரின் மகள் ப்ரீத்தாவும் சில படங்களில் நடித்துவிட்டு இயக்குனர் ஹரியை திருமணம் செய்தார். ஸ்ரீதேவி அழகான நடிப்பை வெளிப்படுத்தியவர். தனுஷ்ம், ஸ்ரீதேவியும் ஆடும், ‘அழகே பிரம்மனிடம் மனுகொடுக்க போயிருந்தேன்..’பாடல் இப்போதும் கேட்கத்தூண்டும் ரகம்.

அவர்கள் குடும்பத்தில் வனிதா விஜயகுமாரை மட்டும் டெரர் ரகம் என சொல்லலாம். அதனால் அடிக்கடி குடும்பத்துக்குள்ளும் சண்டையிட்டு வந்த வனிதாவோடு, மொத்த குடும்பமும் பேச்சை நிறுத்தி ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தான் சிலதினங்களுக்கு முன்னர் விஜயகுமாரின் பிறந்தநாள் வந்தது. அதையொட்டி அவரது மகளும், நடிகையுமான ஸ்ரீதேவி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானும், தன் தந்தை விஜயகுமார் இருக்கும் புகைப்படங்கள், அதையே வீடியோ தொகுப்பாக மாற்றியது ஆகியவற்றை பதிவிட்டு இருந்தார்.

இதைப் பார்த்த வனிதா தான் குழந்தையாக இருக்கும் போது தன் தந்தை விஜயகுமாருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த பதிவைப் பார்த்த வனிதா பாளோவர் ஒருவர், ‘உங்கள் அப்பா குறித்து நீங்கள் சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி நியாபகம் வருகிறது. தினை விதைத்தவன் தினை அறுப்பான். எந்த நிலையிலும் பெத்தவங்களப் பற்றி தப்பா பேசுனவங்க நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்ல. இப்போ நடிப்பு சூப்பர் என கமெண்ட் செய்து இருந்தார் ட்விட்டர் வாசி.

அதற்கு தன் ஸ்டைலில் பதில் சொல்லியிருக்கும் வனிதா, ‘’அது எனது பிரச்னை. எனக்கு என் குடும்பத்தைப் பற்றிப் பேச எல்லா உரிமையும் உள்ளது. அப்புறம் நான் இப்போ ரொம்ப நல்லாவே இருக்கேன். ஆண்டவனே என் பக்கம் தான் இருக்கான். ஆகவே நீ மூடிட்டு உன் வாழ்க்கையைப் பாரு’’ என கமெண்ட் செய்துள்ளார்.


நண்பர்களுடன் பகிர :