ரவுடி பேபி சாய்பல்லவி நிஜமாவே டாக்டரா..? திருச்சியில் வந்து தேர்வு எழுதினார் சாய்பல்லவி..வைரலாகும் செல்பி..! Description: ரவுடி பேபி சாய்பல்லவி நிஜமாவே டாக்டரா..? திருச்சியில் வந்து தேர்வு எழுதினார் சாய்பல்லவி..வைரலாகும் செல்பி..!

ரவுடி பேபி சாய்பல்லவி நிஜமாவே டாக்டரா..? திருச்சியில் வந்து தேர்வு எழுதினார் சாய்பல்லவி..வைரலாகும் செல்பி..!


ரவுடி பேபி சாய்பல்லவி நிஜமாவே டாக்டரா..?  திருச்சியில் வந்து தேர்வு எழுதினார் சாய்பல்லவி..வைரலாகும் செல்பி..!

ரவுடி பேபி பாடலுக்கு தனுஷ்ம், சாய் பல்லவியும் சேர்ந்து ஆடும் ஆட்டம் பட்டி,தொட்டியெங்கும் செம பேமஸ். தனுஷ், சாயாசிங் சேர்ந்து ஆடிய மன்மத ராசா பாடலுக்குப்பின் அதிகம் ரீச் ஆன பாடல் அதுதான். சாய்பல்லவி நடிகை மட்டும் இல்லைங்க...இனி டாக்டரும் கூட! என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கடந்த 2015ல் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து ஹிட் ஆனவர் சாய் பல்லவி. கடந்த 1992ல் பிறந்த இவர் நடிகை மட்டுமல்ல, சிறந்த நடனக் கலைஞரும்கூட! இவர் 2016ல் துல்கர் சல்மானுடன் சேர்ந்து கலி என்ற படத்தில் நடித்தார். 2017ல் பிடா படத்தின்மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகம் ஆனார் சாய்பல்லவி.





தற்போது அம்மணியின் கைவசம் விராட பருவம் உள்பட இரண்டு தெலுங்குப்படங்கள் இருக்கின்றன. இதில் விராட பருவம் படத்தில் பெண் நக்சலைட்டாக நடிக்கிறார். சாய்பல்லவி பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே தமிழில் சிறு,சிறு பாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ படத்தில் நடித்திருக்கிறார் சாய் பல்லவி.





ஜார்ஜியாவில் மருத்துவப்படிப்பு முடித்தவர் சாய் பல்லவி. படிப்பு முடித்த கையோடு தாயகம் திரும்பியவருக்கு சினிமாவில் தொடர்ந்து சான்ஸ் கிடைக்க பிஸியாக நடித்துவந்தார். பொதுவாகவே வெளிநாட்டில் மருத்துவப்படிப்பு படிப்பவர்கள், இந்தியாவில் டாக்டராக இருக்கவேண்டும் என்றால் எப்.எம்.ஜி.இ என்ற எக்ஸாம் எழுதி பாஸாக வேண்டும். இதை இதுவரை சாய்பல்லவி எழுதவில்லை. இந்நிலையில் கரோனா காரணமாக சினிமா சூட்டிங்குகள் ரத்தான நிலையில் சாய்பல்லவி இந்த எக்ஸாமில் தீவிர கவனம் செலுத்தினார். நன்கு படித்த சாய் பல்லவி, திருச்சி எம்.ஏ.எம் கல்லூரியில் வந்து தேர்வு எழுதிச்சென்றார்.

தேர்வு எழுத வந்த சாய் பல்லவியை அடையாளம் கண்ட சக மாணவ, மாணவிகள் அவரோடு செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகிவருகிறது.

புகைப்படம் 1:





புகைப்படம் 2:





புகைப்படம் 3:






நண்பர்களுடன் பகிர :