பதறியடித்து நண்பர் வீட்டுக்கு ஓடிய இளையதளபதி விஜய் .. காரணம் என்னத் தெரியுமா? தளபதின்னா தளபதிதான்..! Description: பதறியடித்து நண்பர் வீட்டுக்கு ஓடிய இளையதளபதி விஜய் .. காரணம் என்னத் தெரியுமா? தளபதின்னா தளபதிதான்..!

பதறியடித்து நண்பர் வீட்டுக்கு ஓடிய இளையதளபதி விஜய் .. காரணம் என்னத் தெரியுமா? தளபதின்னா தளபதிதான்..!


பதறியடித்து நண்பர் வீட்டுக்கு ஓடிய இளையதளபதி விஜய் .. காரணம் என்னத் தெரியுமா? தளபதின்னா தளபதிதான்..!

இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். தமிழகத்தின் செல்லப்பிள்ளை என்றே அவரை சொல்லிவிடலாம். இளையதளபதி என அவரை ரசிகர்கள் உச்சிமுகர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இயக்குனர் சந்திரசேகரின் மகன் என அடையாளத்தில் இருந்த விஜய் இப்போது, எஸ்.ஏ.சந்திரசேகருக்கே விஜயின் அப்பா என்னும் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத தெருவே ஏன் வீடே இல்லை என்றே சொல்லலாம். கடந்த 1984ல் வெற்றி என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய், 1988ல் வெளியான இது எங்கள் நீதி படம்வரையிலும் குழந்தை நட்சத்திரமாகத் தொடர்ந்தார். இப்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். அந்தப்படத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கரோனாவினால் அந்தப்படத்தின் வெளியீட்டுத்தேதி தள்ளிப்போகிறது.

நண்பன் படத்தில் நடிகர் விஜய் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அது படத்துக்கான காட்சி மட்டும் அல்ல. நிஜமாகவே நடிகர் விஜய் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்தான். இந்த லாக்டவுண் சமயத்தில் கூட தனது நண்பர்களுடன் வீடியோ கால்பேசிய புகைப்படம் வைரலானது. நடிகர் விஜயின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் சஞ்சீவ். இவர் சின்னத்திரையில் பிஸியான நடிகராக உள்ளார். இருவரும் ரொம்பவும் நெருங்கிய நண்பர்கள். ஆரம்பகாலத்தில் விஜய்க்கு நண்பராகவும் சிலப் படங்களில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் விஜயின் நண்பர் சஞ்சீவ்க்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சஞ்சீவ் தனக்கு கரோனா இருக்குமோ என பயந்து தன் மனைவி, மற்றும் குழந்தைகளை அவர்களது அம்மா வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டார். இதுகுறித்து தெரியவந்ததும் நடிகர் விஜய் சஞ்சீவ்க்கு போன் போட்டு கேட்டுள்ளார்.

உடனே சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறாய்? எனக் கேட்ட விஜய், தனது வீட்டில் இருந்து சாப்பாட்டை எடுத்துக்கொண்டு சஞ்சீவ் வீட்டுக்கே கொண்டுபோய் கொடுத்துள்ளார். இதனை நடிகர் சஞ்சீவே சமீபத்திய தன் பேட்டியில் தெரிவிக்க, தளபதின்னா சும்மாவா..நட்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாரு பாருங்க என தளபதி ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :