நடிகர் தனுஷின் மகன்கள் எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களே... வாய்பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

தமிழ்த்திரையுலகில் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் தனுஷ். அதன் பின்பு இவர் நடித்த காதல் கொண்டேன், திருடா திருடி படங்களும் ஹிட் அடிக்க, ஓப்பனிங்கிலேயே ஹாட்ரிக் அடித்தார் தனுஷ்.

அதன் பின்பு இப்போது உச்சநடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான படங்களிலேயே ஹிட் அடித்த படமாக இவரது அசுரன் இருந்தது. சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகளை கட்டியிருக்கும் தனுஷ்க்கு தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் ரசிகர்கள் உண்டு. தனுஷின் அண்ணன் செல்வராகவன் திரைப்பட இயக்குனராக இருக்கிறார். சகோதிரி கார்த்திகா, மருத்துவராக உள்ளார்.

கொரோனா லாக்டவுணால் சூட்டிங் ரத்தாகியுள்ளதால் தனுஷ் இப்போது குடும்பத்தோடு அதிக நேரத்தை செலவிட்டுவருகிறார். அந்தவகையில் தன் மகன்கள் யாத்ரா, லிங்காவோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதில் யாத்ரா இப்போ ரொம்பவே பெரியவராக வளர்ந்துவிட்டார். அதிலும் தனுஷின் டீ சர்ட்டை போடும் அளவுக்கு பெரிய பையன் ஆகிவிட்டார் யாத்ரா. அவர் தன் இளையமகனை தோளில் தூக்கிக்கொண்டு, மூத்த மகன் யாத்ராவோடு பேசும் புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
