ஆலயத்தின் சுவர்களில் ஏன் சிவப்பு, வெள்ளை நிறம் பூசுகிறார்கள் தெரியுமா? ஆன்மீகத்துக்குள் புதைந்திருக்கும் அறிவியல்..! Description: ஆலயத்தின் சுவர்களில் ஏன் சிவப்பு, வெள்ளை நிறம் பூசுகிறார்கள் தெரியுமா? ஆன்மீகத்துக்குள் புதைந்திருக்கும் அறிவியல்..!

ஆலயத்தின் சுவர்களில் ஏன் சிவப்பு, வெள்ளை நிறம் பூசுகிறார்கள் தெரியுமா? ஆன்மீகத்துக்குள் புதைந்திருக்கும் அறிவியல்..!


ஆலயத்தின் சுவர்களில் ஏன் சிவப்பு, வெள்ளை நிறம் பூசுகிறார்கள் தெரியுமா? ஆன்மீகத்துக்குள் புதைந்திருக்கும் அறிவியல்..!

‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே!’’ என்பது நம் முன்னோர் வாக்கு. ஆலயம் செல்வதன் மூலம் தனிமனித ஒழுக்கமும் பேணப்படும் என்பதால் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் ஆன்மீகப் பழக்கம் மிக முக்கியப் பண்பாகக் கருதப்படுகிறது.

கோயிலுக்கு சென்றால் அந்த ஆலயத்தின் வெளிச்சுற்றுப்பிரகாரம் எதிரே இருக்கும் தெப்பக்குளம் ஆகிய இடங்களில் சிவப்பு, வெள்ளை வர்ணம் பூசியிருப்பதைப் பார்த்திருப்போம். எத்தனையோ வண்ணங்கள் இருந்தும் கோயிலில் சிவப்பு, வெள்ளை மட்டும் ஏன் பூசுகிறார்கள் தெரியுமா? அதன் பின்னால் ஆன்மீகத்தைக் கடந்த மிகப்பெரிய அறிவியலும் இருக்கிறது.

மனித உடலில் வெள்ளையணு, சிவப்பணு என இரண்டுவித அணுக்கள் இருக்கும். இதில் சிவப்பணுக்கள் தான் ஆக்சிஜனை நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச்செல்லும். வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும். மனித ஆரோக்கிய வாழ்வுக்கு இவ்விரு அணுக்களும் முக்கியம். இதை சிம்பாளிக்காக உணர்த்தத்தான் சிவப்பு, வெள்ளை நிறத்தில் கோயில் சுற்றுச்சுவரில் கலர் அடிக்கப்படுகிறது.

இதேபோல் ஆண்களின் விந்து வெள்ளை நிறத்திலும், பெண்களின் கருப்பை சிகப்பு நிறத்திலும் இருக்கும். இரண்டுமே சேர்ந்துதான் உயிர் உண்டாகிறது. இதேபோல் கோவில் வாசல்படியை குனிந்து தொட்டு வணங்கும்போது நமக்குள் பணிவை ஏற்படுத்துகிறது. நம் உடலில் இருக்கும் சூரிய நாடியை அது இயக்கும். தேபோல் படிகட்டைத் தொட்டதும் நம் நெற்றியில் விரலை வைத்து அழுத்துவதால் தீய சதி அகலும் என்பதும் ஐதீகம்.


நண்பர்களுடன் பகிர :