துப்புரவுத் தொழில் செய்யும் தம்பதிக்கு கீழே கிடந்து கிடைத்த பர்ஸ்.. தங்கமும், பணமும் இருந்தும் அவர்கள் செய்த செயல்.. என்ன தெரியுமா? Description: துப்புரவுத் தொழில் செய்யும் தம்பதிக்கு கீழே கிடந்து கிடைத்த பர்ஸ்.. தங்கமும், பணமும் இருந்தும் அவர்கள் செய்த செயல்.. என்ன தெரியுமா?

துப்புரவுத் தொழில் செய்யும் தம்பதிக்கு கீழே கிடந்து கிடைத்த பர்ஸ்.. தங்கமும், பணமும் இருந்தும் அவர்கள் செய்த செயல்.. என்ன தெரியுமா?


துப்புரவுத் தொழில் செய்யும் தம்பதிக்கு கீழே கிடந்து கிடைத்த பர்ஸ்.. தங்கமும், பணமும் இருந்தும் அவர்கள் செய்த செயல்.. என்ன தெரியுமா?

நேர்மையாக இருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். அதிலும் தனது ஏழ்மையான நிலையில் நேர்மையாக இருப்பவர்கள் தெய்வத்திற்குச் சமமானவர்கள் என்றே கூறிவிடலாம். அந்த வகையில் துப்புரவுத் தொழில் செய்யும் தம்பதிகள் நேர்மையாக இருந்து செயல்பட்டவிதம் பலரது பாராட்டையும் பெற்றுவருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இந்த சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பையைச் சேர்ந்தவர் சித்தார்த். இவரது மனைவி ஸ்மிதா. தம்பதிகள் இருவரும் கார்ப்பரேசனில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தூய்மைப்பணியில் ஈடுபட்டுத் திரும்பும்போது அவர்களது வீட்டின் பக்கத்தில் ஒரு பர்ஸ் கிடந்தது. அதை தனது மனைவியின் பர்ஸ் என நினைத்து எடுத்துப்பார்த்தார் சித்தார்த். அதை தன் மனைவியிடம் நீட்ட ‘இது என்னதில்லைங்க..’என சொன்னார் ஸ்மிதா.

இதைத்தொடர்ந்து தம்பதிகல் பர்ஸைத் திறந்துப் பார்க்க முடிவெடுத்தனர். அப்போது அதில் இன்றைய மார்க்கெட் விலையில் 3 லட்ச ரூபாய் அளவுக்கு மதிப்புடைய தங்கத்தாலியும், பணமும் சில ஆவணங்கலும் இருந்தது. உடனே தங்களுக்கு இப்படியொரு பர்ஸ் கிடைத்திருக்கும் தகவலை வாட்ஸ் அப்பில் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து பர்ஸை தவறவிட்ட பெண் இவர்களின் வீட்டுக்கு தேடிவந்து நன்றிப்பெருக்கோடு அந்த பர்ஸை வாங்கிச் சென்றார்.

அந்த பர்ஸ்க்கு சொந்தக்காரரான பிரீத்தி, ‘இப்படி வறுமையிலும் நேர்மையாக இருப்பவர்களைப் பார்த்ததே இல்லை என நெகிழ்ச்சியோடு சொன்னார். அதேபோல் மும்பை கார்ப்பரேசனும் இந்த தம்பதியை அழைத்து கவுரவித்துள்ளது. கரோனாவால் கடும் பொருளாதார சிக்கலை பலரும் சந்தித்துள்ளனர். அதற்கு மத்தியில் இந்த தம்பதியின் நேர்ம சிலிர்க்க வைக்கிறது என அதன் ஊழியர் சகாரே நெகிழ்ச்சியோடு சொன்னார்.

இப்படியான நல்ல உள்ளங்களால் தான் நம் நாட்டில் மழை பொழிகிறது என நெட்டிசன்கள் இவர்களை வாழ்த்திவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :