காப்பித்தூளில் சிக்கரித்தூள் கலப்பது இதனால் தானா? இனி காபியை வாயிலையே வைக்க மாட்டீங்க போல இருக்கே..! Description: காப்பித்தூளில் சிக்கரித்தூள் கலப்பது இதனால் தானா? இனி காபியை வாயிலையே வைக்க மாட்டீங்க போல இருக்கே..!

காப்பித்தூளில் சிக்கரித்தூள் கலப்பது இதனால் தானா? இனி காபியை வாயிலையே வைக்க மாட்டீங்க போல இருக்கே..!


காப்பித்தூளில் சிக்கரித்தூள் கலப்பது இதனால் தானா? இனி காபியை வாயிலையே வைக்க மாட்டீங்க போல இருக்கே..!

காபிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உண்டு. தினசரி இரண்டு காபியேனும் குடிக்காமல் இங்கு நம்மில் பலருக்கும் அன்றைய நாள் முடியாது. அப்படிப்பட்ட காபித் தூளை வாங்கி என்றாவது நீங்கள் கவரைத் திருப்பி பார்த்து இருக்கிறீர்களா?

இதுவரை பார்க்கவில்லை என்றால் இனிமேல் பாருங்கள். அதில் முக்கால் பாகம் காபித்தூளும், கால்பாகம் சிக்கரித்தூளும் போட்டிருப்பார்கள். காபித்தூள் பாக்கெட்டில் கால் பாகம் சிக்கரித்தூள் ஏன் போடுகிறார்கள்? அதைப்பற்றித் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். இந்த சிக்கரி என்பது தாவரத்தின் வேர்பகுதியில் இருந்து கிடைக்கும். இதில் மணம் இருக்காது. ஆனால் காபியின் சுவை இருக்கும். வழக்கமாகவே காபி கசந்தால் தான் பலருக்கும் பிடிக்கும்.

அவர்களுக்கான சேர்மானம் தான் இந்த சிக்கரித்தூள். வழக்கமான காபித்தூளில் கசப்பு குறைவாகவே இருக்கும். கசப்பு சுவைக்காகத்தான் காபித்தூளில் சிக்கரித்தூள் சேர்ப்பாங்க. வரக்காபி என்பது சிக்கரித்தூள் இல்லாமலே போடப்படும். பாலில் காபி போட்டால் தான் சிக்கரித்தூள் சேர்ப்பார்கள். சிக்கரித்தூளே ஒருவிதத்தில் கலப்படம் என்கிறார்கள் சிலர். நல்ல காபி குடிக்க வேண்டும் என்றால் நிறைய காபித்தூள் போட்டு கொதிக்கவைத்து குடிக்க வேண்டும்.

இந்த சிக்கரி கலந்த காபித்தூளில் ஒரு ஸ்பூன் போட்டால் என்ன சுவை கிடைக்குமோ, அது சிக்கரி கலக்காவிட்டால் மூன்று ஸ்பூன் காபித்தூள் போட்டால்தான் கிடைக்கும். இனி காப்பித்தூள் வாங்கினால் சிக்கரி அதில் என்ன அளவு இருக்கிறது என பார்த்து வாங்குங்கள். அல்லது சிக்கரியே சேர்க்காத காபித்தூளை வாங்கி கொஞ்சம் தாராளமாக தூள் சேர்த்து சுவையாக காபி பருகுங்கள்.


நண்பர்களுடன் பகிர :