சாதா பெட்ரோலுக்கும், ஸ்பீட் பெட்ரோலுக்கும் வித்தியாசம் தெரியுமா? இனி முடிவெடுங்க.. எந்த பெட்ரோல் போடணும்ன்னு...! Description: சாதா பெட்ரோலுக்கும், ஸ்பீட் பெட்ரோலுக்கும் வித்தியாசம் தெரியுமா? இனி முடிவெடுங்க.. எந்த பெட்ரோல் போடணும்ன்னு...!

சாதா பெட்ரோலுக்கும், ஸ்பீட் பெட்ரோலுக்கும் வித்தியாசம் தெரியுமா? இனி முடிவெடுங்க.. எந்த பெட்ரோல் போடணும்ன்னு...!


சாதா பெட்ரோலுக்கும், ஸ்பீட் பெட்ரோலுக்கும் வித்தியாசம் தெரியுமா? இனி முடிவெடுங்க.. எந்த பெட்ரோல் போடணும்ன்னு...!

அரிசி, பருப்பு உள்ளிட்டவை எப்படி அடிப்படைத் தேவையோ அதேபோல் இப்போது பெட்ரோலும் அடிப்படை தேவையாகிவிட்டது. வீட்டுக்கு ஒரு வாகனம் இருக்கிறது. பைக், கார் இரண்டுமே இருக்கும் வீடுகளும் இருக்கிறது. இதனால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் பயன்பாடும் இன்று மிதமிஞ்சி இருக்கிறது. இதற்காகவே கிராமப்பகுதிகளில் கூட இன்று பெட்ரோல் பங்குகள் வந்துவிட்டது.

இப்படியான சூழலுக்கு மத்தியில் பெட்ரோல் வழக்கமானது, ஸ்பீட் பெட்ரோல் என விற்பதை பார்த்திருப்போம். ஆனால் அது ஏன் என நாம் யோசிப்பது இல்லை. வழக்கமாக வாகனத்தில் நாம் போடும் பெட்ரோலில் கால் சதவிகிதமே ஆற்றலாக மாறும். மீதி ஆற்றல் அனைத்தும் இயந்திர சக்தி, புகையால் வீணாகிவிடும். அப்படி வீண் ஆவதைத் தடுக்க கண்டுபிடிக்கப்பட்டது தான் ஸ்பீடு பெட்ரோல். பெட்ரோலில் வழக்கமாகவே ஆக்டேன் எண் 91 ஆக இருக்கும்.

ஆக்டேன் என்பது பெட்ரோல் எந்த அளவுக்கு எரிகிறது என்பதன் வேதியியல் அளவீடு. இதன் தரத்தை கொஞ்சம் கூட்டி ஸ்பீட் 93, ஸ்பீட் 97 என்ற பெயரில் பெட்ரோல் போடப்படுகிறது. இதன் அர்த்தம் ஆக்டேன் எண் 93 என்றால் ஸ்பீட் 93 என்பது ஆகும்.

மேட்டர் இவ்வளவுதான். அதேநேரம் ஏன் யாரெல்லாம் ஸ்பீட் பெட்ரோல் போடவேண்டும் என்பதையும் பார்ப்போம். சாதாரண பெட்ரோல் போட்டால் சிலநேரங்களில் இன்ஜினுக்குள் வெடிப்பு சத்தம் கேட்கும். ஸ்பீட் பெட்ரோலில் இதற்கான வாய்ப்புக்குறைவு.

இதேபோல் இன்ஜினின் ஆயுளும் கூடும். இதேபோல் பெட்ரோல் முழுவதுமாக எரிசக்தியாக மாற்றப்பட்டதும் வண்டியில் புகைதள்ளுவது குறையும் மாசு வெளியேறுவதும் குறையும். பொதுவாகவே 200 சிசிக்கு அதிக கொள்ளளவு கொண்ட வாகனங்களில் ஸ்பீட் பெட்ரோல் பயன்படுத்தலாம். அதற்குக் குறைந்த அளவில் இருக்கும் வாகனங்களுக்கு ஸ்பீட் பெட்ரோல் தேவையில்லை. அதற்கு ஸ்பீட் பெட்ரோல் போட்டு கூடுதல் கட்டணத்தை இழக்க வேண்டியது இல்லை.


நண்பர்களுடன் பகிர :