லட்சங்களில் சம்பளம் வாங்கிய இளைஞன்... வாழ்க்கையையே மாற்றிய கரோனா.. கடைசியில் என்ன ஆனார் தெரியுமா? Description: லட்சங்களில் சம்பளம் வாங்கிய இளைஞன்... வாழ்க்கையையே மாற்றிய கரோனா.. கடைசியில் என்ன ஆனார் தெரியுமா?

லட்சங்களில் சம்பளம் வாங்கிய இளைஞன்... வாழ்க்கையையே மாற்றிய கரோனா.. கடைசியில் என்ன ஆனார் தெரியுமா?


லட்சங்களில் சம்பளம் வாங்கிய இளைஞன்... வாழ்க்கையையே மாற்றிய கரோனா.. கடைசியில் என்ன ஆனார் தெரியுமா?

கரோனா வைரஸின் தீவிரம் இந்தியாவில் தினமும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. திடீர் என இந்தியாவில் பரவிய கரோனாவின் தீவிரத்தால் பலரும் வேலை இழப்பை சந்தித்து தவித்துவருகின்றனர். இதேபோல் பலருக்கும் சம்பளம் குறைந்துவிட்டது. இப்படியான சூழலால் மனம் உடைந்த பலரும் தவறான முடிவுகளை எடுத்துவரும் நிலையில் கேரள இளைஞர் ஒருவரின் செயல் ரொம்பவே கவனிக்கவைக்கிறது.

அப்படி என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். கேரளத்தின் இடுக்கிமாவட்டத்தில் அடிமாலி பகுதியைச் சேர்ந்தவர் ராபின் அந்தோணி. எம்.பி.ஏ பட்டதாரியான இவர் மும்பையில் உள்ள டென்டல்கேர் என்னும் கம்பெனியில் வேலைசெய்துவந்தார். சேல்ஸ் மேனேஜர் வேலைசெய்து வந்த இவருக்கு லட்சங்களில் சம்பளம், சொகுசுகார் என வாங்கிக் கொண்டு வாழ்வை ஜம்மென ஓட்டினார். கரோனாவினால் இவரது வேலை பறிபோனது.

இதனைத் தொடர்ந்து தன் சொந்த ஊரான கேரளத்தின் அடிமாலி பகுதிக்குப்போன இவர், அங்கு தன் படிப்பு, வேலை, பணம் எல்லாத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு 800 ரூபாய் சம்பளத்துக்கு கூலிவேலைக்குப் போகிறார். கேரளத்தில் வடமாநிலத்தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுவிட்ட நிலையில் கேரளத்தில் கட்டிட வேலை செய்ய வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவருகிறது. இதனால் அங்கு சித்தாள் வேலைக்கு தினசரி 800 ரூபாய்வரை சம்பளம் கிடைப்பதாக நெகிழ்ச்சியோடு கூறுகிறார் ராபின் அந்தோணி.

படித்த இளைஞர்கள் பலரும் வேலை போய்விட்டது என கன்னத்தில் கைவைத்து உட்காரும்நிலையில் ராபின் அந்தோணியின் செயல் வியக்கவைத்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :