நடிப்பில் சிவாஜியையே ஓவர்டேக் செய்த பொடியன்.. ஆன்லைன் வகுப்பு கொடுமையில்இருந்து தப்பிக்க செய்த டெக்னிக்.. வைரலாகும் சிறுவன்..! Description: நடிப்பில் சிவாஜியையே ஓவர்டேக் செய்த பொடியன்.. ஆன்லைன் வகுப்பு கொடுமையில்இருந்து தப்பிக்க செய்த டெக்னிக்.. வைரலாகும் சிறுவன்..!

நடிப்பில் சிவாஜியையே ஓவர்டேக் செய்த பொடியன்.. ஆன்லைன் வகுப்பு கொடுமையில்இருந்து தப்பிக்க செய்த டெக்னிக்.. வைரலாகும் சிறுவன்..!


நடிப்பில் சிவாஜியையே ஓவர்டேக் செய்த பொடியன்.. ஆன்லைன் வகுப்பு கொடுமையில்இருந்து தப்பிக்க செய்த டெக்னிக்.. வைரலாகும் சிறுவன்..!

கரோனாவால் உலகமே நிலைகுலைந்து போயிருக்கிறது. அந்தப் பாதிப்பு நம் இந்தியாவிலும் தீவிரமாக இருக்கிறது. கரோனா நோயாளிகளும் நாளுக்கு நாள் கூடிவருகின்றனர். கரோனா தீவிரத்தின் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே கல்விநிறுவனங்கள் திறக்கப்படவில்லை.

அதிலும் பள்ளிக்கூடங்களைப் பொறுத்தவரை எல்.கே.ஜி முதல் பிளஸ் டூவரை இப்போது ஆன்லைன் வகுப்பு நடந்துவருகிறது. இண்டர்நெட் வசதியும், ஸ்மார்ட் போன் வசதியும் இல்லாத பல குடும்பங்கள் இதனால் ரொம்பவே சிரமப்பட்டதையும் பார்க்க முடிந்தது. அதேநேரம் ஆன்லைன் வகுப்பு குழந்தைகளுக்கு ரொம்பவே சிரமத்தைக் கொடுத்துள்ளது. பள்ளிக்கூடம் இல்லையென்றாலும் ஆன்லைன் வகுப்புகளில் வந்து வீட்டுப்பாடம், தேர்வு என நடக்கும் வகுப்புகள் குழந்தைகளை ரொம்பவே சிரமப்படுத்துகிறது.

இப்படியான சூழலுக்கு மத்தியில் சிறுவன் ஒருவன் ஆன்லைன் வகுப்பில் கொடுத்த டெஸ்டை எழுதுவதற்கு டிமிக்கி கொடுக்கும் காட்சிகள் செம வைரலாகிவருகிறது. கடைசியில் தன் தாயிடம் நீங்க ரெஸ்ட் எடுங்கம்மா என அழுதுகொண்டே சொல்ல நமக்கோ குபீர் சிரிப்பு கியாரண்டி. ஆனாலும் இந்த சிறுவனின் நடிப்புக்கு விருதே கொடுக்கலாம்..


நண்பர்களுடன் பகிர :