குடும்பத்தின் வறுமையை போக்க ஆண்வேடமிட்டு சிறுமி செய்த செயல்.. நெகிழவைக்கும் காரணத்தால் உருகும் மக்கள்..! Description: குடும்பத்தின் வறுமையை போக்க ஆண்வேடமிட்டு சிறுமி செய்த செயல்.. நெகிழவைக்கும் காரணத்தால் உருகும் மக்கள்..!

குடும்பத்தின் வறுமையை போக்க ஆண்வேடமிட்டு சிறுமி செய்த செயல்.. நெகிழவைக்கும் காரணத்தால் உருகும் மக்கள்..!


குடும்பத்தின் வறுமையை போக்க ஆண்வேடமிட்டு சிறுமி செய்த செயல்.. நெகிழவைக்கும் காரணத்தால் உருகும் மக்கள்..!

தன் குடும்ப வறுமையை போக்க வீட்டில் இருந்தே சுக்கு கசாயம் போட்டு விற்கும் தாய், அதை விற்கச் செல்லும் தன் மகளுக்கு ஆண் வேடமிட்டு அனுப்பி வைக்கும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது உருகவைக்கும் காரணம் தெரியவந்தது.

புதுப்பேட்டை ஜோதிவிநாயகர் கோவில்தெருவைச் சேர்ந்தவர் ரகமத் பானு. இவருக்கு மூன்று குழந்தைகள். இதில் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இளைய மகள் 7ம் வகுப்பும், மகன் 2ம் வகுப்பும் படித்துவருகின்றனர். கரோனாவினால் இவர்களது குடும்பம் மிகவும் கஷ்டமான சூழலுக்குள் போனது. இந்நிலையில் வீட்டில் இருந்தே சுக்கு கசாயம் போட்ட ரகமத் பானு, அதை தன் குழந்தைகளை அனுப்பி விற்றுவருகிறார்.

குடும்பத்தின் சூழலை உணர்ந்து குழந்தைகளும் தங்களால் முடிந்த அளவுக்கு கஷ்டத்தைக் குறைக்க வீதி, வீதியாக போய் விற்கிறார்கள். இதில் கசாயத்தை விற்கும் ஏழாம் வகுப்பு மாணவி ஆண்களைப்போல் பாப் கட்டிங் செய்து, சட்டை, பேண்ட் போட்டுள்ளார். பெண் பிள்ளையின் பாதுகாப்பிற்காக இப்படி பானு செய்துள்ளாராம். இதைப்பற்றி தெரிந்த நெட்டிசன்கள் குட்டி சைக்கிளில் வரும் அந்த குழந்தை தேவதைகளை ஆச்சர்யத்தோடு பார்த்துவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :