வந்தாச்சு மாஸ்க் புரோட்டா... அலைமோதும் மக்கள் கூட்டம்... எங்கு தெரியுமா? Description: வந்தாச்சு மாஸ்க் புரோட்டா... அலைமோதும் மக்கள் கூட்டம்... எங்கு தெரியுமா?

வந்தாச்சு மாஸ்க் புரோட்டா... அலைமோதும் மக்கள் கூட்டம்... எங்கு தெரியுமா?


வந்தாச்சு மாஸ்க் புரோட்டா... அலைமோதும் மக்கள் கூட்டம்... எங்கு தெரியுமா?

புரோட்டா உடலுக்கு கேடுதான் என்றாலும் புரோட்டாவை பிடிக்காதவர்கள் இருக்கவே மாட்டார்கள். அதிலும் சுடச்சுட ஆவி பறக்க கம, கமக்கும் சால்னாவோடு சாப்பிடுவதே தனி சுவைதான்.

கொத்து புரோட்டா, வீச்சு புரோட்டா என பல புரோட்டாக்களை கேள்வி பட்டிருக்கிறோம். மாஸ்க் புரோட்டா கேள்விப்பட்டது உண்டா? அதை வாடிக்கையாளர்களுக்கு போட்டுக்கொடுத்து அசத்தி வருகிறது ஒரு புரோட்டா கடை.

கரோணா வைரஸ் பரவல் பல தொழில்களையும் புதுமையை நோக்கி நகர்த்தி உள்ளது. முகத்தில் போடும் மாஸ்கில் அவர், அவர் முகத்தின் தோற்றத்தை வைத்து செய்வதுசில வாரங்களுக்கு முன்பு ட்ரெண்ட் ஆனது.

இப்போது மதுரையில் கரோணா வேகமாக பரவிவரும் நிலையில் மக்களிடம் அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபல தனியார் உணவகம் ஒன்று மதுரையில் வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்து உள்ளது.

மாட்டுதாவனியில் உள்ள ஹோட்டல் ஒன்று மாஸ்க் வடிவில் புரோட்டா செய்து அசத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :