மூச்சு இறைக்க ஓடிவந்த இளம்பெண்.. பேருந்தை நிறுத்திவிட்டு செய்த தரமான செயல்...! Description: மூச்சு இறைக்க ஓடிவந்த இளம்பெண்.. பேருந்தை நிறுத்திவிட்டு செய்த தரமான செயல்...!

மூச்சு இறைக்க ஓடிவந்த இளம்பெண்.. பேருந்தை நிறுத்திவிட்டு செய்த தரமான செயல்...!


மூச்சு இறைக்க ஓடிவந்த இளம்பெண்.. பேருந்தை நிறுத்திவிட்டு செய்த தரமான செயல்...!

கேரளத்தில் இளம்பெண் ஒருவர் தன் மூச்சுவாங்கும் அளவுக்கு ஓடிவருகிறார். அவர் பேருந்தை நிறுத்திவிட்டு செய்யும் செயல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

கேரளத்தில் அரசு பேரூந்து ஓன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து நிறுத்தம் ஒன்றில் பஸ் நின்று கொண்டு இருந்தது. அது புறப்பட தயாரானபோது இளம்பெண் ஒருவர் தன் மூச்சு வாங்கும் அளவுக்கு வேகமாக ஓடிவந்தார்.

கண்டக்டரும் அந்த பெண் பேருந்தில் ஏறுவதற்காகத் தான் இவ்வளவு வேகமாக வருவதாக நினைத்து கொண்டார். அந்த பெண் தொடர்ந்து கண்டக்டரிடம் ஏதோ சொல்லிவிட்டு மீண்டும் ஓடினார். அவர் அந்த வழியாக பேருந்தை பிடிக்க நீண்ட குச்சியின் உதவியோடு தட்டி தட்டி வந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவரை அழைத்து பேருந்தில் ஏற்றி விட்டு சென்றார்.

இந்த பேருந்து திருவனந்தபுரம் செல்லுமா என எதார்த்தமாக கேட்டிருக்கிறார் அந்த பார்வையற்றவர். உடனே இப்படி தீயாக செயல்பட்டு இருக்கிறார் அந்த இளம்பெண். இதை அந்த பகுதியில் இருந்த ஒருவர் தன் செல்போனில் பதிவு செய்ய அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :