எட்டில் ஐந்து எண் கழியும்.. ஐந்தில் எட்டு கழியாது வரியின் நிஜ அர்த்தம் இதுதான்.. தசாவதாரத்தில் இவ்வளவு பெரிய வரியா? Description: எட்டில் ஐந்து எண் கழியும்.. ஐந்தில் எட்டு கழியாது வரியின் நிஜ அர்த்தம் இதுதான்.. தசாவதாரத்தில் இவ்வளவு பெரிய வரியா?

எட்டில் ஐந்து எண் கழியும்.. ஐந்தில் எட்டு கழியாது வரியின் நிஜ அர்த்தம் இதுதான்.. தசாவதாரத்தில் இவ்வளவு பெரிய வரியா?


எட்டில் ஐந்து எண் கழியும்.. ஐந்தில் எட்டு கழியாது வரியின் நிஜ அர்த்தம் இதுதான்.. தசாவதாரத்தில் இவ்வளவு பெரிய வரியா?

சில திரைப்படங்களில் வரும் வரிகளை நாம் வழக்கமான பாடல்வரிகளாகவே நினைத்து7 முணுமுணுத்துக்கொண்டு சென்றுவிடுவோம். ஆனால் அதில் பல உள் அர்த்தங்கள் இருக்கும். அந்தவகையில் தசாவதாரம் படத்தில் வரும் எட்டில் ஐந்து எண் கழியும் என்றும் ஐந்தில் எட்டு எண் கழியாது பாடல் வரியும் அப்படித்தான். அதன் உண்மையான அர்த்தம் இப்போது தெரியவந்துள்ளது.

கமலஹாசன், அசின் நடித்த தசாவதாரம் படத்தில் கமல் பத்துவேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிதான் கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது பாடலில் இந்தவரிகள் இடம்பெற்று இருக்கும். இதன் அர்த்தத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அந்த காலத்தில் சிவன், விஷ்ணுவை வழிபடுபவர்கள் இடையே யுத்தம் இருந்து கொண்டே இருந்தது. அந்தப்படத்திலும் கூட கமலிடம் சிவனை வணங்கச் சொல்வார்கள். ஆனால் கமலோ ஓம் நமோ நாரயணாய என விஷ்ணுவின் பெயரையே சொல்லிக் கொண்டிருப்பார்.

எட்டெழுத்து உடைய ஓம் நமோ நாரயணயா என்பது ஐந்தெழுத்து உடைய நமசிவாய என்பதில் அடங்கும். ஆனால் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில் ஓம் நமோ நாரயணாய என்னும் மந்திரம் அடங்காது. என்பது அர்த்தமாம். ஹரியும், சிவனும் ஒன்று என்பதை சொல்லும் அந்த பாடல்வரியின் அர்த்தத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :