கதவு அசையாமல் இருக்க வைக்கப்பட்டிருந்த கல்லின் மதிப்பு இத்தனை கோடியா? குடும்பத்தினருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..! Description: கதவு அசையாமல் இருக்க வைக்கப்பட்டிருந்த கல்லின் மதிப்பு இத்தனை கோடியா? குடும்பத்தினருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..!

கதவு அசையாமல் இருக்க வைக்கப்பட்டிருந்த கல்லின் மதிப்பு இத்தனை கோடியா? குடும்பத்தினருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..!


கதவு அசையாமல் இருக்க வைக்கப்பட்டிருந்த கல்லின் மதிப்பு இத்தனை கோடியா? குடும்பத்தினருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..!

பொதுவாகவே கதவோ, மேஜையோ அசையாமல் இருக்க நாம் முட்டுக்கொடுப்பது வழக்கமான ஒன்றுதான். அமெரிக்காவில் அப்படி முட்டுக்கொடுத்த ஒரு கல்லின் விலை இன்று கோடி ரூபாய் என்பது அந்த குடும்பத்தினரை சந்தோசக்கடலில் ஆழ்த்தியிருக்கிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானவியல் பேராசொரியர் மோனாசிர்பெஸ்.இவரை அதேபகுதியை சேர்ந்த மற்றொருவர் தன் வீட்டில் இருந்த பத்துகிலோ கல்லுடன் சந்தித்தார். ஆராய்ச்சியில் பேராசிரியருக்கு அது விண்கல் எனத் தெரியவந்தது. இதை உறுதிசெய்ய ஸ்மித் சோனியன் இன்ஸ்டியூட் என்னும் புகழ்பெற்ற அறிவியல்மையத்துக்கு இதை அனுப்பிவைத்தார் பேராசிரியர். அங்குநடந்த ஆராய்ச்சியிலும் அது விண்கல்தான் எனத் தெரியவந்தது.

அதிலும் பெரும்பாலான விண்கல்லில் 90 சதவிகிதம் முதல் 95 சதவிகிதம்வரை இரும்பு இருக்கும். இதில் 88 சதவிகித இரும்பும், 12 சதவிகித நிக்கலும் உள்ளது. அதனாலே இந்த கல் தனித்துவம் பெற்றுள்ளது. இதன் மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலராகும் இந்த கல் 80 ஆண்டுகளுக்கு முன்பு மிக்சிகனில் உள்ள எட்மோர் என்ற இடத்தில் . விவசாய நிலத்தில் விழுந்துள்ளது.

இதன் மதிப்புத் தெரியாமல் அந்த நபர், தன் வீட்டு கதவில் முட்டுக்கொடுத்து வைத்திருந்தார். இப்போது அந்த நபர் விண்கல் விற்ற பணத்தில் இருந்து பத்துசதவிகித பணத்தை அவருக்கு வழிகாட்டிய பல்கலைக்கழகத்துக்கு கொடுத்திருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :