லீவுக்கு வீட்டுக்குவந்த பேரன்கள்.. கோழிக்குழம்பு வைத்துக்கொடுத்த பாட்டி... அடுத்தடுத்து நடந்த சோகம்... Description: லீவுக்கு வீட்டுக்குவந்த பேரன்கள்.. கோழிக்குழம்பு வைத்துக்கொடுத்த பாட்டி... அடுத்தடுத்து நடந்த சோகம்...

லீவுக்கு வீட்டுக்குவந்த பேரன்கள்.. கோழிக்குழம்பு வைத்துக்கொடுத்த பாட்டி... அடுத்தடுத்து நடந்த சோகம்...


லீவுக்கு வீட்டுக்குவந்த பேரன்கள்.. கோழிக்குழம்பு வைத்துக்கொடுத்த பாட்டி... அடுத்தடுத்து நடந்த சோகம்...

கரோனாவால் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில் தன்வீட்டுக்கு வந்த பேரன்களுக்கு கோழிக்குழம்பு வைத்துக்கொடுத்த பாட்டி பேரன்கள் அதை சாப்பிட்டதும் இறந்தது தெரிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள செருலோபள்ளியை சேர்ந்த தனம்மா என்ற பெண்மணி தனது இருமகன்களான ஜீவா, ரோகித் ஆகியோரை குடிபாலா பகுதியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு அனுப்பிவைத்தார். பேரன்கள் வீட்டுக்கு வந்திருக்கும் உற்சாகத்தில் இருந்த கோவிந்தம்மாள் கோழி வாங்கு குழம்பு வைத்துக் கொடுத்திருக்கிறார். அப்போது சிக்கன் மசாலா பொடிக்கு பதிலாக தவறுதலாக பூச்சிமருந்தை எடுத்து போட்டுவிட்டார்.

இதுதெரியாமல் தன் கையாலேயே பேரன்களுக்கு ஆசையாய் சமைத்துக்கொடுத்து அவரும் சாப்பிட்டார். இதில் இவர்கள் மூவரும் வீட்டிலேயே மயங்கி விழுந்தனர். நீண்டநேரமாகியும், வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம், பக்கத்தினர் சந்தேகத்தின்பேரில் போய் பார்த்தனர். மூவரையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்போனார்கள்.

இதில் கோவிந்தம்மாளுக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேரன்கள் இருவரும் இதில் பரிதாபமாக உயிர் இழந்தனர். பாட்டி வீட்டுக்குப்போய் கோழிக்கறி சாப்பிட்டதில் சிறுவர்கள் இருவர் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நண்பர்களுடன் பகிர :