வீட்டில் அடிக்கடி சண்டையா? மனைவியை வசப்படுத்த சூப்பர் டிப்ஸ் இதோ.. கண்டிப்பாக பெண்கள் படிக்க வேண்டாம்..! Description: வீட்டில் அடிக்கடி சண்டையா? மனைவியை வசப்படுத்த சூப்பர் டிப்ஸ் இதோ.. கண்டிப்பாக பெண்கள் படிக்க வேண்டாம்..!

வீட்டில் அடிக்கடி சண்டையா? மனைவியை வசப்படுத்த சூப்பர் டிப்ஸ் இதோ.. கண்டிப்பாக பெண்கள் படிக்க வேண்டாம்..!


வீட்டில் அடிக்கடி சண்டையா? மனைவியை வசப்படுத்த சூப்பர் டிப்ஸ் இதோ.. கண்டிப்பாக பெண்கள் படிக்க வேண்டாம்..!

கரோனாவால் பெரும்பான்மை கம்பெனிகள் ‘வொர்க் ப்ரம் ஹோம்’ கொடுத்துள்ளன. இதில் இருவகையான சிக்கல்கள் இருக்கிறது. ஒன்று, அதிகரிக்கும் மக்கள்தொகை. ஆம், கணவனும், மனைவியும் வீட்டிலேயே இருப்பதால் இந்தியா உள்ளிட்ட பலநாடுகளிலும் குழந்தைகளின் பிறப்புவிகிதம் அதிகரித்துள்ளது. அதேபோல் இன்னொரு முக்கியப் பிரச்னை..கணவன்,மனைவிக்குள் அடிக்கடி ஏற்படும் பிரச்னைகள்!

இது பல ஆண்களையும் சோர்வடையச்செய்யும் நிலையில் வீட்டில் இருக்கும் மனைவியை தன் வசப்படுத்த சூப்பர் டிப்ஸ் இதோ..

வெளியில் போய் வீடுதிரும்பும் ஆண்களுக்கு மனைவிக்கு பிடித்த உணவுப்பொருளின் பெயரைச் சொல்லி அதை வாங்கிவரவான்னு கேட்கலாம். மனைவியிடம் குறை கண்டுபிடிப்பதை நிறுத்துங்கள். நாமும் தவறு செய்திருக்கிறோமே என நினைத்துப்பாருங்கள்.உங்களின் முகம், உடை, சிகை அலங்காரங்களை மனைவிடம் காட்டி இது ஓகேயா? நான் வேற ஏதாச்சும் மாத்தணுமான்னு அடிக்கடி கேளுங்கள்.

குழந்தை அடிக்கடி உங்கள் மனைவியை தொந்தரவு செய்வதுபோல் தெரிந்தால் ஒரு இரண்டுமணிநேரம் நீங்கள் அவர்களை பராமரியுங்கள். மனைவிக்கு உங்கள்மேல் அன்பு பொங்கும். வாரம் ஒருமுறை பார், பீச், சினிமா என எங்காவது கூட்டிப் போங்கள்.(கரோனா பிரச்னை முடிந்ததும்) அப்படி அழைத்துச் செல்ல முடியாவிட்டால் அதற்காக பீல் செய்வதுபோல் நடிக்கவாவது செய்யுங்கள்.

இதேபோல் உங்கள் மனைவியின் பெர்த்டே, உங்கள் கல்யாண நாள்களுக்கு மனைவிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து அசந்துங்கள். அது அவர்களுக்கு ரொம்ப சந்தோசத்தைக் கொடுக்கும். உங்கள் மனைவி புதுத்துணி போட்டிருந்தால் மனம் திறந்து பாராட்டுங்கள். இந்த டிரஸ், உங்களுக்கே அளவெடுத்து தைத்ததுபோல் இருக்கு எனச்சொல்லவும். மனைவியை பார்த்து அவ்வப்போது சிரியுங்கள்.வாரத்தில் ஒருநாள் நீங்களே சமைத்துக்கொடுத்து மனைவியை அசத்துங்கள். சமையல் சாமான்கள் தீரும்முன்பே வீட்டில் வாங்கிவைத்து விடுங்கள். இப்படி சின்ன, சின்ன யுத்திகளை கையாண்டாலே வீட்டில் சண்டையில்லாமல் நகர்த்தலாம். இதை கொஞ்சம் வீட்டில் பாளோ செய்யுங்கள் ஆண்களே..


நண்பர்களுடன் பகிர :