அடேங்கப்பா..கண்டங்க்த்திரியில் இவ்வளவு மருத்துவ குணங்களா? வேர் முதல் ஒவ்வொன்றும் மருந்துதான்.. இனி மிஸ் செய்யாதீங்க..! Description: அடேங்கப்பா..கண்டங்க்த்திரியில் இவ்வளவு மருத்துவ குணங்களா? வேர் முதல் ஒவ்வொன்றும் மருந்துதான்.. இனி மிஸ் செய்யாதீங்க..!

அடேங்கப்பா..கண்டங்க்த்திரியில் இவ்வளவு மருத்துவ குணங்களா? வேர் முதல் ஒவ்வொன்றும் மருந்துதான்.. இனி மிஸ் செய்யாதீங்க..!


அடேங்கப்பா..கண்டங்க்த்திரியில் இவ்வளவு மருத்துவ குணங்களா? வேர் முதல் ஒவ்வொன்றும் மருந்துதான்.. இனி மிஸ் செய்யாதீங்க..!

தானாகவே வளரும் செடிகளில் ஒன்று கண்டங்கத்திரி. இதை ஊருக்கு ஒரு பெயரில் அழைத்தாலும், பல உடல்சுகவீனங்களையும் இந்த நோய் போக்குகிறது. இது பல் பிரச்னையையும் போக்குகிறது.

பல்வலி போக..

கண்டங்கத்திரி செடியில் மூன்றுவகைகள் இருக்கிறது. அவை சின்ன கண்டங்கத்திரி, பெரிய கண்டங்கத்திரி, வொயிட் கண்டங்கத்திரி. இது உஷ்ணம் நிறைந்த பகுதியில் தான் அதிகமா முளைக்கும். சின்ன கணங்கத்திரியின் காய்கள் பச்சை நிறத்திலும், பழுத்த பின்பு மஞ்சள் கலரிலும் இருக்கும். இந்த பழத்தின் விதை நம் வாய்க்குள் இருக்கும் கிருமிகளை அழிக்கும்.

பல்லில் கிருமிகள் இருப்பதால் தான் அது சொத்தை பல்லாக மாறுகிறது. இதனால் பல்வலியும் ஏற்படும். இதை கட்டுப்படுத்த கண்டங்கத்திரி செடியை வேரோடு எடுத்துவந்து நல்லா காயவைக்கணும். அதில் பூ, செடி, காய், பழம் எல்லாம் இருக்கணும். அந்த செடி மொத்தமாக நல்லா காய்ஞ்ச பின்னாடி, அதை சின்ன சின்ன துண்டாக கட்செய்து தண்ணீரில் போட்டு குதிக்க விடணும். அது நல்ல கொதிச்ச பின்னாடி, அந்த தண்ணீரை வடிகட்டி கொப்பளிக்க வேண்டும். இப்படிச் செய்தாலே பல்லில் இருக்கும் கிருமிகள் அனைத்தும் வெளியில் போயிடும்.

இதேபோல் காய்ந்த கண்டங்கத்திரி பழத்தில் உள்ள விதைகாஇ எடுத்து, அதை ஒரு காட்டன் துணியில் வைத்து சுற்றிக்கொள்ள வேண்டும். இதை இப்போது ஒரு கின்னத்தில் வைத்து நன்றாக சூடுபடுத்த வேண்டும். இப்போது இந்த விதைகளில் இருந்துவரும் புகையை ஏதாவது ஒருபாட்டிலை பாதியாகக் கட் செய்து, அதன் மூலமாக உங்க வாய்க்குள் அனுப்புங்க. இப்படி செய்வதாலும் பல்லில் இருக்கும் கெட்ட கிருமிகள் போய்விடும். கூடவே பல்வலியும் போய்விடும்.

ஆஸ்துமா போக..

கண்டங்கத்திரியை வேருடன் எடுத்து வெயிலில் காயப்போட வேண்டும்இதில் வேர், இலை, பூ எல்லாம் இருப்பது சிறப்பு, இதை வெயிலில் .காயவைத்து பொடிசெய்ய வேண்டும். இந்தப் பொடியை, சாம்பிராணிப் பொடியை தட்டில் எடுத்து அதனோடு பொடியையும் போட்டு சேர்த்து சுவாசித்தால் ஆஸ்துமா தீரும். இதில் மூச்சுத்திணறில் தொல்லையும் இருக்காது.

கண்டங்கத்திரியின் பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணியிர்களை எதிர்க்கும் மருத்துவப்பண்பு கொண்டிருப்பதாக உயர்நிலை ஆய்வுகள்ம்மூலம் தெரியவந்துள்ளது. கணடங்கத்திரி சிறுநீர் பெருக்கும். குடல்வாய் அகற்றும்.

வியர்வை நாற்றம்போக..

சிலருக்கு உடலில் இருந்து வியர்வை நாற்றம் அதிகளவில் வெளிப்படும்.இவர்கள் முதலில் கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனோடு கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடிகட்ட வேண்டும். இதனை வியர்வை நாற்றம் உள்ள இடத்தில் தேய்த்துவந்தால் அது போய்விடும்.

சளித்தொல்லை போக..

கண்டங்கத்திரி முழுத்தாவரத்தையும் எடுத்து முதலில் முள்நீக்க வேண்டும். இதை முதலில் காயவைக்க வேண்டும். இது நன்றாக காய்ந்ததும் அரை தேக்கரண்டி தூளுடன், அரை தேக்கரண்டி தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டுவர ஆஸ்துமா, சளிப்பிரச்னையும் போகும்.


நண்பர்களுடன் பகிர :