35 வயதிலும் தேவதையாக ஜொலிக்கும் நயன்தாரா... அவரது கொஞ்சும் அழகின் ரகசியம் இதுதானாம்..! Description: 35 வயதிலும் தேவதையாக ஜொலிக்கும் நயன்தாரா... அவரது கொஞ்சும் அழகின் ரகசியம் இதுதானாம்..!

35 வயதிலும் தேவதையாக ஜொலிக்கும் நயன்தாரா... அவரது கொஞ்சும் அழகின் ரகசியம் இதுதானாம்..!


35 வயதிலும் தேவதையாக ஜொலிக்கும் நயன்தாரா... அவரது கொஞ்சும் அழகின் ரகசியம் இதுதானாம்..!

நயனுக்கு இப்போது 35 வயது. ஆனாலும்கூட ஆண்டுக்கு, ஆண்டு வயது ஏறுகிறதோ இல்லையோ, அம்மணியின் அழகு ஏறுகிறது. இதன் ரகசியத்தை அண்மையில் போட்டு உடைத்திருக்கிறார் நயன். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மலையாளத் திரையுலகின் மூலம் திரைத்துறைக்கு வந்த நயன் தாரா தமிழில் ஹரி இயக்கி சரத்குமார் நடித்த ஐயா திரைப்படம் நல்ல ஒப்பனிங் தந்தது. ஆரம்பத்தில் சீனியர் நடிகர்களோடு நடித்த நயன் இப்போது இளம் நடிகர்களுக்கு ஜோடியாக கலக்கி வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார் நயன் தாரா.

நடிகை நயன் தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே...இவர்கள் இருவரும் சேர்ந்தே இப்போது அடிக்கடி ஊர்சுற்றியும் வருகின்றனர். அண்மையில் கூட மூக்குத்தி அம்மன் சூட்டிங்கிற்கு விக்னேஷ் சிவனோடே வந்திருந்த நயன் தாரா, குமரிமாவட்டம் முழுவதும் கோயில், கோயிலாக அவரோடு போய் தரிசனம் செய்தார். அண்மையில் இவர் செய்த டிக் டாக் வீடியோவும் இணையவாசிகளால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

அண்மையில் அஜித்தோடு சேர்ந்து நடித்த விஸ்வாசம், ரஜினிகாந்த்தோடு சேர்ந்து நடித்த தர்பார் இரண்டுபடங்களுமே நயனுக்கு நல்லபெயரை வாங்கிக்கொடுத்தன. இப்போது அம்மணி கைவசம் நெற்றிக்கண், அண்ணாத்த, மூக்குத்தி அம்மன், காத்துவாக்குல இரண்டுகாதல் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இப்போது நயனின் பிட்னஸ் ரகசியங்களை இனி பார்க்கலாம்.

உடலுக்குத் தேவையான அளவுக்கு தண்ணீர் அருந்துவதை நயன் எப்போதும் மிஸ் செய்ததே இல்லையாம். எவ்வளவுதான் சூட்டிங் பிஸி என்றாலும் அம்மணி அதை பாளோ செய்துவிடுவார். தினமும் முகத்தை சுத்தம் செய்வது, சருமப் பொலிவை பராமரிப்பது, ஈரத்தன்மையோடு வைத்திருப்பது ஆகியவற்றையும் ரொம்ப ஸ்ட்ரிட்டாக பாளோ செய்வாராம் நயன். உணவுமுறையில் அதிக பழங்களைச் சேர்த்துக்கொள்வதும் நயனுக்கு வழக்கமாம். உடற்பயிற்சி, யோகா, டயட் ஆகிய மூன்றையும் முக்கியமாக மெயிண்டைன் செய்வார் நயன். அழகுசாதனங்களை கூட ஆரோக்கியமான இயற்கை பொருள்களாக பார்த்தேதான் வாங்குவாராம் நயன்.


நண்பர்களுடன் பகிர :