நடிகர் செந்திலையே ஆச்சர்யப்படுத்திய வெளிநாட்டு அழகி.. ஆனாலும் எப்படி இருந்த செந்தில் இப்படியாகிட்டாரு? Description: நடிகர் செந்திலையே ஆச்சர்யப்படுத்திய வெளிநாட்டு அழகி.. ஆனாலும் எப்படி இருந்த செந்தில் இப்படியாகிட்டாரு?

நடிகர் செந்திலையே ஆச்சர்யப்படுத்திய வெளிநாட்டு அழகி.. ஆனாலும் எப்படி இருந்த செந்தில் இப்படியாகிட்டாரு?


நடிகர் செந்திலையே ஆச்சர்யப்படுத்திய வெளிநாட்டு அழகி..   ஆனாலும் எப்படி இருந்த செந்தில் இப்படியாகிட்டாரு?

நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. பட்டிதொட்டியெங்கும் அவர் பேமஸ். அதிலும் கவுண்டணியும், இவரும் சேர்ந்துவிட்டால் திரையரங்கில் சிரிப்பு பட்டாசுத்தான்.

செந்தில் என்றதுமே நம் நினைவில் கரகாட்டக்காரன் படத்தில் வரும் அந்த வாழைப்பழ காமெடிதான் நினைவுக்கு வரும். நடிகர் செந்தில் துவக்கத்தில் ஒரு மதுபானக்கடையில் தான் வேலை செய்து இருக்கிறார். தொடர்ந்து நாடக மேடைகளில் ஏறியவருக்கு நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் வாய்ப்பு வழங்க மலையூர் மம்பட்டியானில் அறிமுகமாகி, பின்பு திரையில் ஜொலித்தது அனைவரும் அறிந்ததே...

நடிகர் செந்தில் கடந்த 1984ல் கல்யாணம் செய்து கொண்டார். இவரது மனைவியின் பெயர் கலைச்செல்வி. இந்த தம்பதிக்கு மணிகண்டபிரபு, ஹேமச்சந்திரபிரபு என இரண்டு மகன்கள். இதில் மணிகண்டபிரபு சாலிகிராமத்தில் தன் தந்தை செந்திலின் பெயரில் பல் ஆஸ்பத்திரி வைத்திருக்கிறார். ‘உன்னை எனக்கு பிடிச்சுருக்கு’ என்று இவரை நாயகனாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமும் பாதியில் நின்று போனது. செந்திலின் இளையமகன் சினிமோட்டோகிராபி படித்துள்ளார்.

செந்தில் 500க்கும் அதிகமானப் படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடித்திருந்தாலும் அவரது கேரியரில் அவராலும், மற்றவர்களாலும் மறக்கவே முடியாதத் திரைப்படம்தான் கரகாட்டக்காரன். இதில்வரும் அந்த வாழைப்பழக்காமெடியை இப்போது வெளிநாட்டு ரசிகை ஒருவர் டிக்டாக்கில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்து செந்திலே ஆச்சர்யப்பட்டுக் கடைசியில் சூப்பர் எனக் கைகாட்டுகிறார். இந்த டிக்டாக் வீடியோ இணையத்தில் அதிகம்பேரால் பார்க்கப்பட்டுவருகிறது.

அதேபோல் குறித்த அந்த வீடியோவில் செந்தில் முகம்நிறைய தாடியோடு பரிதாபமாக இருக்கிறார். லாக்டவுணால் வீட்டிலேயே முடங்கி அவர் இப்படி இருப்பதாகக் கூறப்படுகிறது.


நண்பர்களுடன் பகிர :