கர்ப்பமாக இருக்கும் மைனா நந்தினி.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அவரே வெளியிட்ட ஸ்வீட் தகவல்..! Description: கர்ப்பமாக இருக்கும் மைனா நந்தினி.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அவரே வெளியிட்ட ஸ்வீட் தகவல்..!

கர்ப்பமாக இருக்கும் மைனா நந்தினி.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அவரே வெளியிட்ட ஸ்வீட் தகவல்..!


கர்ப்பமாக இருக்கும் மைனா நந்தினி.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அவரே வெளியிட்ட ஸ்வீட் தகவல்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அமோக ஆதரவு பெற்ற சீரியலான சரவணன் மீனாட்சி தொடரில் கதாநாயகி ரக்‌ஷிதாவுக்கு தோழியாக வந்து அனைவரையும் கவர்ந்தவர் மைனா நந்தினி. இவரது தனிப்பட்ட வாழ்க்கை ஏராளமான போராட்டங்கள் நிறைந்தது. அதில் இருந்து இப்போதுதான் மெல்ல மீண்டுவந்துள்ளார்.

ஜிம் மாஸ்டர் கார்த்திகேயனை சிலவருடங்களுக்கு முன்பு மைனா நந்தினி திருமணம் செய்தார். ஆனால் தம்பதிக்குள் கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2017ல் தற்கொலை செய்து உயிரை விட்டார் கார்த்திகேயன். இதனால் மன உலைச்சல் ஒருபுறம், சிக்கலில் மறுபுறம் என தவித்துவந்த நந்தினி, யோகேஷ் என்பவர் மீது காதல் வயப்பட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நந்தினி_யோகேஸ்க்கு திருமணம் முடிந்தது. ராஜா ராணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்பட சிலப்படங்களிலும் நடித்திருக்கிறார் நந்தினி. சில தினங்களுக்கு முன்பு தன் பிறந்தநாளைக் கொண்டாடினார் மைனா நந்தினி. அதற்கு அவர் கணவரும், சீரியல் நடிகருமான யோகேஸ்வரன் புதுத்துணி எடுத்துக் கொடுத்துள்ளார்.கேக் வெட்டிக் கொண்டாடிய நந்தினி தொடர்ந்து பேட்டி கொடுத்தார். அதில், ‘தான் இப்போது 5 மாத கர்ப்பிணி, எங்களுக்கு ஆண்குழந்தை, பெண்குழந்தை என எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. எந்த குழந்தை பிறந்தாலும் மகிழ்ச்சியே!’என்று சொல்லியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :