மாஸ்க் அணிந்தபடி ஆஸ்பத்திரிக்கு வந்த தல அஜித்? யாருக்கு என்னாச்சு? ரசிகர்கள் கலக்கம்..! Description: மாஸ்க் அணிந்தபடி ஆஸ்பத்திரிக்கு வந்த தல அஜித்? யாருக்கு என்னாச்சு? ரசிகர்கள் கலக்கம்..!

மாஸ்க் அணிந்தபடி ஆஸ்பத்திரிக்கு வந்த தல அஜித்? யாருக்கு என்னாச்சு? ரசிகர்கள் கலக்கம்..!


மாஸ்க் அணிந்தபடி ஆஸ்பத்திரிக்கு வந்த தல அஜித்? யாருக்கு என்னாச்சு?  ரசிகர்கள் கலக்கம்..!

தன் ரசிகர்களால் செல்லமாக தல என அழைக்கப்படுபவர் அஜித்குமார். ஆசைநாயகன், அல்டிமேட் ஸ்டார் என்றெல்லாம் ஆரம்ப கட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அஜித் தீனா படத்தில் நடித்த பின்பு ரசிகர்களால் தல என்று அழைக்கப்பட்டார்.

தமிழ்த் திரைப்பட நடிகர்களிலேயே அதிக அளவு ரசிகர்கள் பலம் கொண்டவர் அஜித் குமார் தான். அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தோடு மோதிய இவரது விஸ்வாசம் மகா,மெகா ஹிட் ஆனதோடு. வசூலிலும் சாதனை படைத்தது. இப்போது வலிமை சூட்டிங் ஊரடங்கால் முடங்கியுள்ளது. கரோனா நிவாரண நிதிக்கு ஒருகோடியே 25 லட்ச ரூபாயைக் கொடுத்திருந்தார் அஜித்.

திரையுலப் பிண்ணனியே இல்லாமல் தன் சொந்த உழைப்பினால் இப்போது இருக்கும் இந்த இடத்தை எட்டியிருக்கிறார் நடிகர் அஜித். பொதுவாக அஜித்தை பொது இடங்களில் பார்ப்பதே மிக, மிக அரிதான விசயம். அவரது சொந்தத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கோ, அறிமுக விழாவுக்கோ கூட தல தலைகாட்ட மாட்டார். அப்படிப்பட்ட அஜித்தை இந்த கரோனா காலத்தில் வெளியில் பார்த்தால் விடுவார்களா? தல வெறியர்கள்..

அஜித், அவரது மனைவி ஷாலினியோடு பிரபல மருத்துவமனை ஒன்றுக்கு போய் இருக்கிறார். சமூக இடைவெளிவிட்டு முகத்தில் மாஸ்க் அணிந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் போகும் அஜீத்தை, அங்கு இருக்கும் செவிலியர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அதிலும் அவர் ச்சே...நான் அங்க இருந்திருந்தா இன்னும் க்ளியரா பார்த்திருக்கலாம்..ச்சே என வேதனையோடு தெரிவிக்கின்றார். அஜித் கையில் ஸ்கேன் ரிப்போர்ட் இருப்பதும் அந்த வீடியோவில் தெரிகிறது.

அஜீத் வேறு யாரையும் பார்க்க வந்தாரா? அல்லது தனக்கு ஏதும் சிகிட்சை எடுக்க வந்தாரா என்பது தெரியவில்லை. இதோ அந்த வீடியோ..


நண்பர்களுடன் பகிர :