கரோனாவால் படவாய்ப்பு இல்லை.. நடுரோட்டில் பழம்விற்கும் நடிகர்.. தீயாய் பரவும் தகவல்..! Description: கரோனாவால் படவாய்ப்பு இல்லை.. நடுரோட்டில் பழம்விற்கும் நடிகர்.. தீயாய் பரவும் தகவல்..!

கரோனாவால் படவாய்ப்பு இல்லை.. நடுரோட்டில் பழம்விற்கும் நடிகர்.. தீயாய் பரவும் தகவல்..!


 கரோனாவால் படவாய்ப்பு இல்லை.. நடுரோட்டில் பழம்விற்கும் நடிகர்.. தீயாய் பரவும் தகவல்..!

உலக அளவில் கொரனா நோய் பல்வேறு தாக்கங்களை உருவாக்கிவிட்டது. இந்தியாவிலும் கொரனாவால் நான்காம்கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திரைப்படத் தொழில் சார்ந்த வாய்ப்புகளும், சூட்டிங்கும் முற்றாக முடங்கிப் போயுள்ளது. இந்நிலையில் சினிமா வாய்ப்பை இழந்த நடிகர் ஒருவர் நடுரோட்டில் நின்று வாழைப்பழம் விற்ற சம்பவம் பலரையும் உலுக்கியுள்ளது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்து ஹிட் அடித்தத் திரைப்படம் ட்ரீம் கேர்ள். இதில் சோலங்கி திவாகர் சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார். சின்ன,சின்ன கேரக்டர் ரோல் மட்டுமே செய்துவந்த இவர் கொரானா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ளார். இதனால் தன் வீட்டுக்கு வாடகை கொடுக்கவும், குடும்பத்தை ஓட்டவும் சாலையில் நின்றுகொண்டு வாழைப்பழம் விற்கிறார்.

சினிமாத்துறை இன்னும் சூட்டிங் நடக்காமல் முடங்கிப் போயிருப்பதால் இவரைப்போல் சின்ன ரோல் செய்வோரும், தினக்கூலித் தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அதன் காரணமாக சோலங்கி திவாகர் வாழைப்பழம் விற்கும்நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :