ஆசை மகளுக்கு நடந்த கொண்டாட்டம்... உச்சகட்ட மகிழ்ச்சியில் சூரி.... வாழ்த்தும் ரசிகர்கள்..! Description: ஆசை மகளுக்கு நடந்த கொண்டாட்டம்... உச்சகட்ட மகிழ்ச்சியில் சூரி.... வாழ்த்தும் ரசிகர்கள்..!

ஆசை மகளுக்கு நடந்த கொண்டாட்டம்... உச்சகட்ட மகிழ்ச்சியில் சூரி.... வாழ்த்தும் ரசிகர்கள்..!


ஆசை மகளுக்கு நடந்த கொண்டாட்டம்... உச்சகட்ட மகிழ்ச்சியில் சூரி.... வாழ்த்தும் ரசிகர்கள்..!

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் நகைச்சுவை நடிகர்களில் சூரியும் ஒருவர். இதுவரை காமெடியனாகவே நடித்துவந்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார்.

தமிழர்களுக்கு புரோட்டாவைப் பார்த்தாலே இப்போதெல்லாம் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா சூரியின் காமெடிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பரோட்டா சூரி இப்போது பேமஸ். ஆனால் மனிதரின் ஆரம்பகால வாழ்க்கை ரொம்பவே பரிதாபமானது. லாரியில் கிளீனராகக்கூட வேலைசெய்து பலகட்ட போராட்டங்களுக்கு பின்புதான் திரைத்துறையில் நுழைந்தார்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் வரும் 14ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் வீட்டில் இருக்கும் சூரி, தன் வீட்டு குழந்தைகளோடு சேர்ந்து கரோனா விழிப்புணர்வு வீடியோவையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதுபோக பெப்சி எனப்படும் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம், தன் சொந்த ஊர் மக்களுக்கும் நிதி உதவி செய்திருந்தார் சூரி.

இந்நிலையில் லாக்டவுணில் வீட்டில் இருக்கும் பரோட்டா சூரியின் மகளுக்கு பிறந்தநாள் வந்தது. இதை வெகு உற்சாகத்தோடு கொண்டாடித் தீர்த்திருக்கிறார் சூரி. அவர் தன் மகள், மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு என் செல்ல மகளுக்கு பிறந்தநாள் என பதிவேற்றியிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பரோட்டா சூரி, தான் அறிமுகமாகி தனக்கு பெயர் வாங்கிக்கொடுத்த வெண்ணிலா கபடிக்குழுவுக்கு நன்றிசொல்லும் விதத்தில் தன் ஆசை மகளுக்கு ‘வெண்ணிலா’ என்றே பெயர் சூட்டியிருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :