இரண்டேநாளில் செத்துடுவேன்...எங்க அம்மாவிடம் விட்டுடுங்க.. ஒரே மாதத்தில் 20 கிலோ குறைந்து, துபாயில் தவிக்கும் தமிழ் இளைஞன்..நெஞ்சை உலுக்கும் வீடியோ..! Description: இரண்டேநாளில் செத்துடுவேன்...எங்க அம்மாவிடம் விட்டுடுங்க.. ஒரே மாதத்தில் 20 கிலோ குறைந்து, துபாயில் தவிக்கும் தமிழ் இளைஞன்..நெஞ்சை உலுக்கும் வீடியோ..!

இரண்டேநாளில் செத்துடுவேன்...எங்க அம்மாவிடம் விட்டுடுங்க.. ஒரே மாதத்தில் 20 கிலோ குறைந்து, துபாயில் தவிக்கும் தமிழ் இளைஞன்..நெஞ்சை உலுக்கும் வீடியோ..!


 இரண்டேநாளில் செத்துடுவேன்...எங்க அம்மாவிடம் விட்டுடுங்க..  ஒரே மாதத்தில் 20 கிலோ குறைந்து, துபாயில் தவிக்கும் தமிழ் இளைஞன்..நெஞ்சை உலுக்கும் வீடியோ..!

வெளிநாட்டு வேலைக்குச் செல்லவேண்டும், கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது பலரது கனவு. அப்படி வெளிநாட்டுக்குப் போய் மிகுந்த கஷ்டப்பட்டு, நோயுடன் தவிக்கும் ஒரு இளைஞர் எப்படியாவது என்னை என் அம்மாவிடம் விட்டுடுங்க..நான் இன்னும் இரண்டுநாளில் செத்திடுவேன் என கதறும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது காண்போர் நெஞ்சையும் உலுக்குகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

தேனிமாவட்டம், போடி பகுதியை சேர்ந்த 27வயது வாலிபர் கணேஷ்குமார். இவர் கடந்த ஜனவரியில் துபாயில் வேலைக்குப்போனார். டிப்ளமோ பட்டதாரியான இவர், கரோனாவால் வேலை இழந்து நண்பரின் ரூமில் தங்கி இருந்தார். இந்நிலையில் அவருக்கு மஞ்சள்காமாலை வந்தது. வாலிபரை துபாய்க்கு அழைத்துப்போன ஏஜெண்ட்ம் தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில் போதிய மருத்துவ வசதி இல்லாமல் துபாயில் தவிக்கும் இந்த வாலிபரின் தந்தை டெய்லரிங் கடை ஒன்றில் தினக்கூலி டெய்லராக இருக்கிறார். இவருக்கு கணேஷ்குமார் போக இன்னொரு மகளும் உள்ளார். அவர் 12ம் வகுப்பு படித்துவருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘என் மகன் துபாயில் இருந்து லேசா உடம்புக்கு சரியில்ல. மருந்து சாப்பிட்டா சரியாகிடும்ன்னு சொன்னான். அவன் ரெண்டுநாளைக்கு முன்னாடி போட்ட வீடியோவைப் பார்த்ததும்தான் இவ்வளவு பெரிய பிரச்னையில் இருக்கான்னு புரிஞ்சுது.

இந்த கஷ்டத்தை எங்களுக்குச் சொல்லக்க்கூடாதுன்னும் ப்ரண்ட்ஸ்ங்ககிட்ட சொல்லியிருக்கான். என் மகனை மீட்டுத்தரணும். அல்லது துபாயிலேயே உரிய மருத்துவ சிகிட்சை கிடைக்க வழிசெய்யணும்.’என கண்ணீரோடு சொல்கிறார் இந்த ஏழைத் தந்தை. இறைஞ்சும் இந்த இளைஞனின் குரல் இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டுவருகிறது.


நண்பர்களுடன் பகிர :