கரோனா தொற்றிய தாத்தா..பாட்டி: ஆசைதீர கட்டியணைத்த பேத்தி.. அடுத்துநடந்தது என்ன தெரியுமா? Description: கரோனா தொற்றிய தாத்தா..பாட்டி: ஆசைதீர கட்டியணைத்த பேத்தி.. அடுத்துநடந்தது என்ன தெரியுமா?

கரோனா தொற்றிய தாத்தா..பாட்டி: ஆசைதீர கட்டியணைத்த பேத்தி.. அடுத்துநடந்தது என்ன தெரியுமா?


கரோனா தொற்றிய தாத்தா..பாட்டி: ஆசைதீர கட்டியணைத்த பேத்தி.. அடுத்துநடந்தது என்ன தெரியுமா?

கரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகநாடுகளையும் உலுக்கி எடுத்து வருகிறது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவே, கரோனாவை எதிர்கொள்ள முடியாமல் திணறிவருகிறது. தினமும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான உயிர் இழப்புகளும் நடந்து வருகிறது.

சீனாவின் வூகான் நகரில் இருந்துதான் கரோனா வைரஸ் தொற்றுப் பரவியது. இதன் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்குநாள் தீவிரமாகிவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும்வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள் மூலமும் பரவும் என்னும் எண்ணத்தில் பலரும் தங்கள் பணங்களையும் காயவைத்து பயன்படுத்துகின்றனர்.

கரோனாவால் அமெரிக்காவே வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நெருங்கிய சொந்தங்களைக் கூட பார்க்க முடியாமல் நோய் தொற்றிவிடும் என்னும் பயத்தில் மக்கள் உள்ளனர். இப்படியான சூழலில் 10 வயதான சிறுமி ஒருவர் தன் தாத்தா, பாட்டியை கட்டியணைக்க வித்தியாசமான ஒருமுயற்சியை செய்துள்ளார்.

அதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.கலிபோர்னியாவைச் சேர்ந்த பத்துவயது சிறுமி லிண்ட்சே. இவரது தாத்தாவும், பாட்டியும் கரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி சிகிட்சை பெற்றுவருகின்றனர். தாத்தா, பாட்டி மீது அலாதி பாசம் கொண்ட லிண்ட்சே அவர்களைக் கட்டியணைக்க ஒருயுத்தியைக் கையாண்டார். இதற்காக இந்த சிறுமி பாலித்தீன் பைகளால் ஆன பெரிய திரையை உருவாக்கியிருக்கிறார்.

அதில் கட்டித்தழுவும் வகையில் பையையும் பசையால் ஒட்டினார். அதன்மூலம் தன் தாத்தா, பாட்டியை ஆசைதீர கட்டிப்பிடித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றது.


நண்பர்களுடன் பகிர :