என்னோட அக்காவை அரெஸ்ட் பண்ணுங்க சார்.. போலீஸில் புகார்கொடுத்த 8வயது சிறுவன்.. காரணத்தை என்னனு தெரியுமா..? Description: என்னோட அக்காவை அரெஸ்ட் பண்ணுங்க சார்.. போலீஸில் புகார்கொடுத்த 8வயது சிறுவன்.. காரணத்தை என்னனு தெரியுமா..?

என்னோட அக்காவை அரெஸ்ட் பண்ணுங்க சார்.. போலீஸில் புகார்கொடுத்த 8வயது சிறுவன்.. காரணத்தை என்னனு தெரியுமா..?


என்னோட அக்காவை அரெஸ்ட் பண்ணுங்க சார்.. போலீஸில் புகார்கொடுத்த 8வயது சிறுவன்.. காரணத்தை என்னனு தெரியுமா..?

அடிதடி, சண்டை என பெரிய பிரச்னைகளுக்கே போலீஸ் ஸ்டேசனுக்கு போக தயங்கி தங்களுக்குள் பேசி முடித்துக்கொள்பவர்கள் அதிகம். ஆனால் இங்கே 8 வயதே ஆன சிறுவன் ஒருவன் தன்சொந்த அக்காவின் மீது போலீஸில் புகார்கொடுக்கச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

கேரளமாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவன் உமர் நிதர். எட்டு வயதான இந்த சிறுவன் மூன்றாம்வகுப்பு படித்துவருகிறான். ஊரடங்கு காரணமாக இந்த சிறுவனால் விளையாடப் போகமுடியாமல் இருந்துள்ளார். உமர்நிதரின் அக்காவும், அவரது தோழிகளும் சேர்ந்து இவரது வீட்டில் தினமும் விளையாடுவார்கள். அந்த ஆட்டத்தில் உமர்நிதரை சேர்த்துக் கொள்ளவில்லையாம். இதைப்பற்றி உமர்நிதர் தன் அப்பாவிடம் சொல்லியிருக்கிறார்.





அவரும் விளையாட்டாக அப்போ ‘நீ வேண்ணா போலீஸில் கம்ப்ளைண்ட் குடு’ என சொல்லியிருக்கிறார். இந்நிலையில் உமரின் பக்கத்துவீட்டுக்கு கஸ்பா பகுதியைச் சேர்ந்த போலீஸார் விசாரணைக்குச் சென்றிருக்கிறார்கள். அதைப் பார்த்த உமர், எனக்கு ஒரு கம்ளைய்ண்ட் கொடுக்கணும் என்றவாறே புகார்கொடுக்க் போயிருக்கிறார்.





அந்தபுகாரில் சிறுவன் என்ன எழுதியிருந்தான் தெரியுமா? ‘நான் ஒருபையன் என்பதால் என் அக்காவும், அவளின் தோழிகள் லூடோ, பேட்மிட்டன் விளையாட்டுக்களில் என்னை சேர்த்துக் கொள்வதில்லை. என சொல்லியிருக்கிறார். அதேநேரம் இப்போது இரவாகிவிட்டதால் நாளை காலை உங்கள் வீட்டுக்கு வந்து பார்க்கிறேன் என அங்குவந்த இருபோலீஸாரும் சொல்லியிருக்கிறார்கள்.





இதனைத்தொடர்ந்து சொன்னதுபோலவே மறுநாள் இருபோலீஸார் உமர்வீட்டுக்கு வந்தனர். அப்போது உமர்கொடுத்த புகார் கடிதத்தில், ‘நான் அவர்களிடம் கேம்ஸில் சேர்த்துக்கொள்ள பலமுறை சொன்னேன். அவர்கள் சேர்த்துக்கொள்ளவில்லை. உடனடியாக அவர்களை கைதுசெய்ய வேண்டும்.’என எழுதியிருந்தது. இதை சிரித்துக்கொண்டே படித்த போலீசார் உமர்ரின் சகோதிரியையும், அவரது தோழிகளையும் அழைத்து அறிவுரை சொல்லி விளையாட்டில் சேர்த்துக்கொள்ள சொன்னார்கள்.


நண்பர்களுடன் பகிர :