பொள்ளாச்சி சம்பவத்தையே ஓவர்டேக் செய்யும் நாகர்கோவில் காசி.. பெண்களிடம் பேசும் ஆடியோ லீக்கானது..! Description: பொள்ளாச்சி சம்பவத்தையே ஓவர்டேக் செய்யும் நாகர்கோவில் காசி.. பெண்களிடம் பேசும் ஆடியோ லீக்கானது..!

பொள்ளாச்சி சம்பவத்தையே ஓவர்டேக் செய்யும் நாகர்கோவில் காசி.. பெண்களிடம் பேசும் ஆடியோ லீக்கானது..!


பொள்ளாச்சி சம்பவத்தையே ஓவர்டேக் செய்யும் நாகர்கோவில் காசி.. பெண்களிடம் பேசும் ஆடியோ லீக்கானது..!

நாகர்கோவில் கறிக்கடைக்காரர் மகன் காசி இப்போது அகில உலக பேமஸ். பொள்ளாச்சி சம்பவத்துக்கு துளியும் குறைவில்லாமல் காமக் களியாட்டம் ஆடியிருக்கிறான் நாகர்கோவில் காசி. சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பிக்கே நேரடியாக புகார் அனுப்பியதால் இந்த விசயம் வெளிச்சத்துக்கு வந்தது.

கூடவே காசியால் பாதிக்கப்பட்டவர்கள் போலிஸில் புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டதும் பெண்கள் மட்டுமல்லாது ஆக்கிரமிப்பு, கட்டப்பஞ்சாயத்து, கத்துவட்டி என வித, விதமான புகார்கள் அவர்மேல் வந்த வண்ணம் உள்ளது. 26 வயதேயான காசியின் மீது இத்தனை புகார்களா என போலீஸாரே மலைத்துப்போக காசியோ கூலாக தன் கைகளில் ஹார்ட்டீன் விட்டு நீதிமன்ற வளாகத்தையே பரபரப்பாக்கினார் காசி. காசி பல பெண்களையும் கல்யாணம், செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி கடைசியில் மிரட்டியிருக்கிறார். அதன் மூலம் காதல் வார்த்தையில் உருகவைத்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளார்.

காசிக்கு அரசியல் பின்புலமும் இருப்பதாக அவரது நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் காசி பெண்களிடம் தனக்கே உரிய ஸ்டைலில் பேசும் ஆடியோவும் ரிலீஸ் ஆகியுள்ளது. காசி போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும்நிலையில் இதை யார் வெளியிட்டிருப்பார்கள் என்னும் கோணத்திலும் போலீஸார் விசாரித்துவருகின்றனர். வழக்கமாகவே தன்னுடன் பழகும் பெண்களுடன் ஆபாசமாக புகைப்படம், வீடியோவை எடுத்துக் கொள்வாராம் காசி. அது அந்தப் பெண்களுக்கு தெரியவந்து நட்பை துண்டிக்கும்போது வீடியோவைக் காட்டி மிரட்ட ஆரம்பிப்பாராம்.

நீதிமன்றத்தில் ஹார்ட்டீன் விட்ட காசி எப்போது பாத்ரூமில் வழுக்கி விழுவார் என காத்திருக்கிறது தமிழகம்!


நண்பர்களுடன் பகிர :