தாயோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தர்ஷன்.. குழந்தைப் பருவத்தில் சாக்ஷி இவ்வளவு அழகா? அழகில் நிச்சயம் மயங்கிடுவீங்க..!

பிக்பாஸ் நிகழ்ச்சி பலருக்கும் நல்ல பிளாட்பாரமாக இருக்கிறது. அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர்களில் ஒருவர் தர்ஷன். சீசன் 3 நிகழ்வில் அவர்தான் டைட்டில் வின்னராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வெளியேற்றப்பட்டார். இது பலரையும் வருத்தம்கொள்ளவும் வைத்தது.
பிக்பாஸ் வீட்டில் தர்ஷன், துள்ளுவதோ இளமை திரைப்பட புகழ் ஷெரினோடு நெருக்கமாக இருந்தார். அதைப் பார்த்து அவரது காதலியும், மாடல் அழகியுமான சனம் ஷெட்டி ரொம்பவே கதறினார். தொடர்ந்து தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே இனி தர்ஷனின் வாழ்வில் நான் இல்லை என பகிரங்கமாக வெளியிட்டார்.

இருவரது மோதல் போலீஸ் ஸ்டேசன் வரை போனது. இதனால் சனம் ஷெட்டிக்கும், தர்ஷனுக்கும் இடையே நடக்க இருந்த திருமணமும் ரத்தானது. இந்நிலையில் நேற்று அன்னையர் தினம் என்பதால் நடிகர் தர்ஷன் தனது அம்மாவை கட்டியணைத்தபடி இருகும் புகைப்படத்தை தன் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் கவினை காதலிப்பதாகச் சொல்லி லாஸ்லியாவுடன் கடும் மோதலில் ஈடுபட்டவர் சாக்ஸி. கரோனா லாக்டவுணால் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் சாக்ஷி அவ்வப்போது போட்டோசூட் நடத்தி இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு ஷாக்சி தான் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் முதல் இப்போதிருக்கும் தன் புகைப்படங்கள்வரை வெளியிட்டுள்ளார். இதில் சிறுவயதில் ரொம்பவும் புஸ்டியாக இருக்கிறார் சாக்ஸி. இந்தப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
புகைப்படம் 1:

புகைப்படம் 2:
