நடிகை மீனாவின் அம்மாவிடம் ரஜினிகாந்த் கேட்ட அந்த ஒரு கேள்வி.. 35 ஆண்டுகளுக்குப்பின் போட்டு உடைத்த நடிகை மீனா..! Description: நடிகை மீனாவின் அம்மாவிடம் ரஜினிகாந்த் கேட்ட அந்த ஒரு கேள்வி.. 35 ஆண்டுகளுக்குப்பின் போட்டு உடைத்த நடிகை மீனா..!

நடிகை மீனாவின் அம்மாவிடம் ரஜினிகாந்த் கேட்ட அந்த ஒரு கேள்வி.. 35 ஆண்டுகளுக்குப்பின் போட்டு உடைத்த நடிகை மீனா..!


நடிகை மீனாவின் அம்மாவிடம் ரஜினிகாந்த் கேட்ட அந்த ஒரு கேள்வி.. 35 ஆண்டுகளுக்குப்பின் போட்டு உடைத்த நடிகை மீனா..!

தமிழ்த்திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக உயர்ந்தவர் நடிகை மீனா. ரஜினி அங்கிள் என குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, அதே ரஜினியுடன் டூயட் பாடும் அளவுக்கு சினிமாத்துறையில் கோலோச்சினார்.

1982ல் வெளியான நெஞ்சங்கள் படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் மீனா. தொடர்ந்து வந்த அன்புள்ள ரஜினிகாந்த், நடிகை மீனாவுக்கு நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது. 1991ல் என் ராசாவின் மனசிலே படத்தில் நடிகர் ராஜ்கிரணுக்கு ஜோடியாக அறிமுகம் ஆன மீனா, 90களின் கனவு தேவதையாக வலம்வந்தார். திருமணத்துக்கு பின்னர் சிலகாலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தவர், இப்போது தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கலில் நடுவராக தரிசனம் தருவதோடு, நடிக்கவும் தொடங்கி இருக்கிறார்.

நடிகை மீனாவைப் போலவே அவரது மகளும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரையில் கலக்கிக் கொண்டு இருக்கிறார. இந்நிலையில் நடிகை மீனா அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்தபோது நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ளார். குறித்த அந்த திரைப்படம் நேற்று டிவியில் ஒளிபரப்பானது. அதைப் பார்த்துவிட்டே மீனா பழைய நினைவுகளை கிளறியிருந்தார்.

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரோஷி என்னும் பாத்திரத்தில் நடித்தார் மீனா. 1984ல் வெளியான இந்தப்படம் மீனாவுக்கு நல்லபெயரை வாங்கிக்கொடுத்தது.படத்தில் தனது அறிமுகக்காட்சியான உணவில் தண்ணீர் ஊற்றுவது, பாலை அம்பிகாவின் முகத்தில் ஊற்றுவது போன்ற காட்சிகளைப்போட்டு ‘கொடுமைக்கார சிறுமி; என்றும், ரஜினி சாக்லேட், ஸ்வீட் வழங்கும்போது துப்பும் காட்சியையும் குறிபிட்டு தான் நடித்ததிலேயே இதுதான் கஷ்டமான காட்சி. ஏன்னா, எனக்கு சாக்லேட், ஸ்வீட்ஸ்ன்னா அவ்வளவு பிடிக்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.

கூடவே ரஜினிகாந்த், தன் தாயாரிடம், எந்த கடையில் அரிசி வாங்குறீங்கன்னு என்னை கிண்டலடிக்கும் வகையில் கேட்டர் எனவும் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை நெகிழ்ச்சியோடு பகிர்ந்திருக்கிறார் நடிகை மீனா.


நண்பர்களுடன் பகிர :