குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அரங்கேறும் சண்டைகள்... செந்தில், ராஜலட்சுமி இருவரும் சேர்ந்து வெளியிட்ட ரகசியங்கள்..! Description: குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அரங்கேறும் சண்டைகள்... செந்தில், ராஜலட்சுமி இருவரும் சேர்ந்து வெளியிட்ட ரகசியங்கள்..!

குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அரங்கேறும் சண்டைகள்... செந்தில், ராஜலட்சுமி இருவரும் சேர்ந்து வெளியிட்ட ரகசியங்கள்..!


குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அரங்கேறும் சண்டைகள்... செந்தில், ராஜலட்சுமி இருவரும் சேர்ந்து வெளியிட்ட ரகசியங்கள்..!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பட்டி, தொட்டியெல்லாம் பேமஸ் ஆன ஜோடி தான் செந்தில் கணேஷ்_ராஜலெட்சுமி!

நாட்டுப்புறப் பாடல்களை பாடி, அதற்கான அடையாளத்தையும் உருவாக்கிய பெருமை இந்த ஜோடியை சேரும். அதன் பின்னர் இந்த ஜோடி தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவையும் கடந்து உலக அளவில் போய் நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றனர். சில விளம்பரங்களிலும் கூட இந்த ஜோடி தலைகாட்டியது. பிரபுதேவா நடித்து ஷக்தி சிதம்பரம் இயக்கிய சார்லி சாப்ளின் 2 படத்திலும், இவர்கள் ‘’சின்ன மச்சான்...சொல்லு பிள்ளை’’ பாடல் இடம் பெற்றது.

லாக்டவுன் அறிவித்துள்ளதால் செந்தில் கணேஷ்_ராஜலெட்சுமி ஜோடியும் வீட்டுக்குள் முடங்கியிருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே கமிட் ஆகியிருந்த நிகழ்ச்சிகளும் ரத்தானது. இந்நிலையில் லாக்டவுணில் சில பாஸிட்டிவ் விசயங்களும் இருப்பதாக இந்த ஜோடி அண்மையில் மனம்திறந்துள்ளனர். இதுகுறித்து பிரபல ஊடகம் ஒன்றிடம் அவர்கள் பேசியதில், ‘கிராமத்து வாழ்க்கையை ரொம்பவே மிஸ்செய்த செந்திலுக்கு அது திரும்பிக் கிடைத்திருக்கிறது. அம்மா, அப்பா, குழந்தைகளோடு நேரம் ஒதுக்க முடிகிறது. நம்பிக்கையோடு இந்தநிலைமாறும் என காத்திருக்கிறோம்.

எங்களுக்கு ஒரே ஒரு சோகம் இருக்கிறது. லாக்டவுனில் வீட்டிலேயே இருந்து கணவன், மனைவிக்குள் சண்டைவருவதாக கேள்விப்பட்டோம். இதில் நாங்களே முன்னுதாரணம். வீட்டில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாங்கள் இருவரும் சேர்ந்தே தான் இருக்கிறோம். என்றுசொல்லி, வாழ்க்கையை அன்பாக நகர்த்தும் சூத்திரத்தையும் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதோ அந்த வீடியோ..


நண்பர்களுடன் பகிர :