பாலைவனத்தில் தவிக்கும் நடிகர் ப்ரித்வீராஜ்: தேடி தவிக்கும் மகள்.. மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு... லாக்டவுண் சோகம்..! Description: பாலைவனத்தில் தவிக்கும் நடிகர் ப்ரித்வீராஜ்: தேடி தவிக்கும் மகள்.. மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு... லாக்டவுண் சோகம்..!

பாலைவனத்தில் தவிக்கும் நடிகர் ப்ரித்வீராஜ்: தேடி தவிக்கும் மகள்.. மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு... லாக்டவுண் சோகம்..!


பாலைவனத்தில் தவிக்கும் நடிகர் ப்ரித்வீராஜ்: தேடி தவிக்கும் மகள்.. மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு... லாக்டவுண் சோகம்..!

பிரபல மலையாள நடிகர் ப்ரித்விராஜ்க்கு தமிழில் அறிமுகமமே தேவை இல்லை. தமிழிலும் பல தரமான படங்களைச் செய்திருக்கிறார். அழகுகுட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும்போது பாடல் இப்போதும் இவரை நம்முண் நிறுத்தும்.

மலையாளம், தமிழ், இந்தி என மும்மொழிகளிலும் பிஸியாக இருக்கும் பிரித்திவிராஜ், இப்போது மலையாளத்தில் ஆடுஜீவிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் உள்ள வாடிரம் என்னும் பாலைவனப்பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துவந்தது. இந்தநிலையில் இந்தியாவில் கொரனாவுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதைப்போல் ஜோர்டான் நாட்டிலும் பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் படப்பிடிப்பு ரத்து செய்யப்படவில்லை.

அதேநேரம் மார்ச் 27 முதல் படப்பிடிப்புக்கும் தடைவிதிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் ஜோர்டான் நாட்டில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதால் பிரிதிவிராஜின் படக்குழுவுக்கு உணவுகூட கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இதை வேதனையோடு பதிவு செய்திருக்கிறார் நடிகர் பிரித்விராஜ். அவர் அதில் மேலும், எங்கள் குழுவில் ஒரு மருத்துவரும் இருக்கிறார். அவர் 72 மணிநேரத்துக்கு ஒருமுறை எங்கள் உடலை சோதித்துக் கொண்டிருக்கிறார். நாடு திரும்பும் ஆசையோடு காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தன் கணவரின் வருகையை எதிர்பார்த்த் காத்திருக்கும் நடிகர் ப்ரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவுபோட்டுள்ளார். அதில் அவர், என் பொண்ணு தினமும் என்கிட்ட லாக்டவுண் முடிஞ்சுச்சான்னு கேட்குறா. அப்பா வந்திடுவாரான்னும் பாவமாக கேட்கிறாள். நானும், என் மகளும் கணவரைப் பார்க்க ஆசையோடு காத்திருக்கிறோம். விரைவில் ப்ரித்விராஜ் பத்திரமாக வீடுதிரும்புவார் என நெட்டிசன்கள் அவருக்கு ஆறுதல் சொல்லிவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :