கோதுமை மாவுக்குள் 15000 பணத்தை வைத்துக் கொடுத்தது யார்...? உண்மையை உடைத்த அமீர்கான்.. என்ன சொன்னார் தெரியுமா? Description: கோதுமை மாவுக்குள் 15000 பணத்தை வைத்துக் கொடுத்தது யார்...? உண்மையை உடைத்த அமீர்கான்.. என்ன சொன்னார் தெரியுமா?

கோதுமை மாவுக்குள் 15000 பணத்தை வைத்துக் கொடுத்தது யார்...? உண்மையை உடைத்த அமீர்கான்.. என்ன சொன்னார் தெரியுமா?


கோதுமை மாவுக்குள் 15000 பணத்தை வைத்துக் கொடுத்தது யார்...? உண்மையை உடைத்த அமீர்கான்.. என்ன சொன்னார் தெரியுமா?

டெல்லியில் கோதுமைமாவில் 15 ஆயிரம் ரொக்கப் பணத்தை வைத்துக் கொடுத்தது அமீர்கான் என்று சமூக வலைதளங்களில் பரவியநிலையில் அவர் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

டெல்லி மாநகரில் அதிக அளவில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதிக்கு ஒரு லாரி நிறைய தலா ஒரு கிலோ வீதம் பேக் செய்யப்பட்ட கோதுமை மாவுகளை சுமந்துகொண்டு லாரிகூ ஒன்று வந்தது. கூடவே லாரியின் ஹார்னை வேகமாக அழுத்திக்கொண்டு எல்லாரும் வாங்க..ஆளுக்கு ஒருகிலோ மாவு பொட்டலம் வழங்குகிறோம் என அதில் இருந்தவர்கள் குரல் எழுப்பினர்.

ஒருகிலோ மாவுதானே என பணக்காரர்களும், நடுத்தரவர்க்கத்தினரும் ஒருகிலோ தானே அலட்சியமாக ஒதுங்கிக் கொள்ள ஒருநாள் பசியாறுமே என வரிசையில் நின்று ஏழைகள் வாங்கிச் சென்றனர். அது இரவுநேரம் என்பதால் அந்த மக்கள் வீட்டில் மாவை கொண்டுவைத்துவிட்டு தூங்கிவிட்டனர். காலையில் சப்பாத்தி போடலாம் என மாவை பிரித்தபோது ஒவ்வொரு மாவு பாக்கெட்டிலும் 15 ஆயிரம் ரூபாய் இருந்தது.

இதன் மூலம் உண்மையான ஏழைகளுக்கு இந்த உதவி கிடைத்திருக்கிறது. வெளியே யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஓசையின்றி இவ்வளவு பெரிய சேவையை செய்தது பிரபல இந்திநடிகர் அமீர்கான் தான் எனத் தகவல் பரவியது. இது சோசியல் மீடியாக்களிலும் வைரலானது. இந்நிலையில் இதுகுறித்து அமீர்கான் தன் ட்விட்டரில், ‘கோதுமை மாவில் பணம்வைத்துக் கொடுக்கும் மனிதன் நான் அல்ல. அதுமுற்றிலும் போலியானத் தகவல். அதை செய்த ராபின் ஹூட் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடாது என விருப்பப்பட்டிருப்பார் எனக் கூறியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :