நடிகர் அஜித் பட காட்சிகளை வைத்து தேனி போலீஸார் செய்த தரமான சம்பவம்.. தல போல வருமா? அஜித் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு..! Description: நடிகர் அஜித் பட காட்சிகளை வைத்து தேனி போலீஸார் செய்த தரமான சம்பவம்.. தல போல வருமா? அஜித் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு..!

நடிகர் அஜித் பட காட்சிகளை வைத்து தேனி போலீஸார் செய்த தரமான சம்பவம்.. தல போல வருமா? அஜித் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு..!


நடிகர் அஜித் பட காட்சிகளை வைத்து தேனி போலீஸார் செய்த தரமான சம்பவம்.. தல போல வருமா? அஜித் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு..!

தன் ரசிகர்களால் செல்லமாக தல என அழைக்கப்படுபவர் அஜித்குமார். ஆசைநாயகன், அல்டிமேட் ஸ்டார் என்றெல்லாம் ஆரம்ப கட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அஜித் தீனா படத்தில் நடித்த பின்பு ரசிகர்களால் தல என்று அழைக்கப்பட்டார்.

தமிழ்த் திரைப்பட நடிகர்களிலேயே அதிக அளவு ரசிகர்கள் பலம் கொண்டவர் அஜித் குமார் தான். அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தோடு மோதிய இவரது விஸ்வாசம் மகா,மெகா ஹிட் ஆனதோடு. வசூலிலும் சாதனை படைத்தது. இப்போது வலிமை சூட்டிங் ஊரடங்கால் முடங்கியுள்ளது. கரோனா நிவாரண நிதிக்கு ஒருகோடியே 25 லட்ச ரூபாயைக் கொடுத்திருந்தார் அஜித்.

திரையுலப் பிண்ணனியே இல்லாமல் தன் சொந்த உழைப்பினால் இப்போது இருக்கும் இந்த இடத்தை எட்டியிருக்கிறார் நடிகர் அஜித். இந்நிலையில் இப்போது கரோனா அச்சம் காரனமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைவரையும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தேனி போலீஸார் இதில் தல அஜித்குமாரின் பட காட்சியின் மூலம் தரமான விழிப்புணர்வு செய்துள்ளனர்.

தேனி போலீஸார் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் ‘ கொஞ்ச நாளைக்கு எல்லாரும் அவுங்க, அவுங்க வீட்டுலயே இருங்க. பயந்துட்டு இல்ல. பாதுகாப்பாக இருக்க எனச் சொல்லும் ஜனா படக் காட்சியையும், மங்காத்தாவில் அஜித் வீட்டிலெயே இருக்கும் காட்சியையும் சேர்த்து வீடியோவாக போட்டுள்ளனர். இது தல ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


நண்பர்களுடன் பகிர :