லாக்டவுணில் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தும் பதிவு இது.. வாசிங்க...இனி உங்க குடும்பத்தை ரொம்பவே நேசிப்பீங்க..! Description: லாக்டவுணில் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தும் பதிவு இது.. வாசிங்க...இனி உங்க குடும்பத்தை ரொம்பவே நேசிப்பீங்க..!

லாக்டவுணில் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தும் பதிவு இது.. வாசிங்க...இனி உங்க குடும்பத்தை ரொம்பவே நேசிப்பீங்க..!


 லாக்டவுணில் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தும் பதிவு இது.. வாசிங்க...இனி உங்க குடும்பத்தை ரொம்பவே நேசிப்பீங்க..!

சோசியல் மீடியாக்கள் முழுவதும் லாக் டவுண் அழுவாச்சிக் காவியமாக இருக்கிறது. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என பிக்பாஸ் ஷோவைப் போல் பிரகடனப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள். இப்படியான சூழலில்தான் லாக் டவுணில் வாழ்வின் அர்த்தத்தை ஒரு நிமிட வாசிப்பில் போதிக்கிறது இந்த பதிவு..

இனி இதோ அந்த பதிவு உங்களுக்காக..

நடுத்தர வயதுக்காரர் ஒருவர் புதிதாக ஒரு காரை வாங்கினார். அவரது நான்குவயது மகனைவிடவும்,அந்தக் காரை மிகவும் நேசித்தார் அவர். அந்தக் காரை தினமும் காலையில் விழித்ததும் வாட்டர் வாஸ் செய்து விடுவார். துடைப்பதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தோன்றும் போதெல்லாம் காரை துடைக்கக் கிளம்பிவிடுவார்.

அன்று காலையில் காரைப் பார்க்க வீட்டுக்குள் இருந்து வாசலுக்கு வந்தார் அந்த நடுத்தர வயதுக்காரர். காரின் கதவில் முள்ளைவைத்து கீச்சிக் கொண்டிருந்தான் நான்குவயது மகன். இதைப் பார்த்ததும் கடும் டென்ஷன் ஆன அவனது அப்பா, கையில் கிடைத்த ஏதோ பொருளைத் தூக்கி, அந்த பொடியனின் கையிலேயே போட்டார். அவன் வலியால் துடித்தான். அவர் ஸ்பேனர் வைத்து அடித்ததில் விரல் எலும்புகளும் உடைந்துபோனது.

அப்பா, பையனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போனார். பையன் அப்போதுகூட அழுதுகொண்டே, ‘யப்பா சீக்கிரம் சரியாகிடும்ல..நான் உங்க கையைப் பிடிச்சுட்டு ஜாலியா முன்ன மாதிரி சுத்த முடியும்ல..’என கேட்டான். அவனது அப்பாவுக்கு கொஞ்சம் உருத்தியது.. வீட்டுக்குப் போனதும், காரை பார்த்தார். மகன் கீச்சிய கீறலை குனிந்து பார்த்தார். பொடியன் ரொம்ப நல்லவன்..ஐ லவ் அப்பா என எழுதியிருந்தார். கன்னத்தில் யாரோ அடித்தது போல் இருந்தது!

இதோ லாக் டவுண் பிரீயட்..வீடுகளிலேயே இருப்பீர்கள். உறவுகளோடு நேரத்தை செலவிடுங்கள். என்ன இது தரமான பதிவுதானே நண்பர்களே..


நண்பர்களுடன் பகிர :