அடடே நடிகர் எம்.எஸ்.பாஸ்கரா இது? இணையத்தில் லீக்கான அவரது இளமைக்கால புகைப்படம்..!!

நகைச்சுவை பாத்திரம் ஆனாலும், குணச்சித்திரப் பாத்திரமானாலும் சரி தனக்கென தனி முத்திரை பதித்து சிறந்த நடிப்பை வழங்குபவர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். சின்ன பாப்பா.பெரிய பாப்பா சீரியலில் நடிகை நளினியின் சேவராக வந்துதான் ஹிட் ஆனார் எம்.எஸ்.பாஸ்கர்.

பட்டாபி பாத்திரத்தில் காது கேட்காதவராக காதோரம் கையை வைத்துக்கொண்டு சிறப்பாக நடித்திருப்பார். டப்பிங் ஆர்ட்டிஸ்டாகத்தான் தன் வாழ்க்கையில் திரைப் பயணத்தைத் தொடங்கினார் எம்.எஸ்.பாஸ்கர். திருமதி ஒரு வெகுமதி படத்தில் இருந்துத்தான் தன் நடிப்புலக பயணத்தைத் தொடங்கினார்.
இந்நிலையில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் முதன் முதலில் நடித்த திரைப்படத்தை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

அதைப் பார்ப்பவர்கள் அடடே நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அப்போதிருந்தே நடித்து வருகிறாரா என ஆச்சர்யத்தோடு லைக்ஸ் தட்டி வருகின்றனர்.
