பிரல நடிகை ஸ்ட்ரேயாவின் கணவருக்கு கரோனா அறிகுறியா..? மருத்துவர்கள் துரத்திய பரிதாபம்..! Description: பிரல நடிகை ஸ்ட்ரேயாவின் கணவருக்கு கரோனா அறிகுறியா..? மருத்துவர்கள் துரத்திய பரிதாபம்..!

பிரல நடிகை ஸ்ட்ரேயாவின் கணவருக்கு கரோனா அறிகுறியா..? மருத்துவர்கள் துரத்திய பரிதாபம்..!


பிரல நடிகை ஸ்ட்ரேயாவின் கணவருக்கு கரோனா அறிகுறியா..? மருத்துவர்கள் துரத்திய  பரிதாபம்..!

நடிகை ஸ்ரேயாவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமே தேவை இல்லை. உனக்கு 20 எனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ஸ்ரேயா விஜய், ஜெயம் ரவி, விக்ரம், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

சிவாஜி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடித்தார் ஸ்ரேயா. அதன்மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் ஸ்ரேயா பேமஸ் ஆனார். திரையுலகில் பிஸியாக இருக்கும்போதே தொழிலதிபர் ஆண்ட்ரே கோஷ்சியை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இப்போது ஸ்ரேயா பார்சிலோனாவில் தன் கணவரோடு வாழ்ந்துவருகிறார்.

இப்போது உலகம் முழுவதும் கொரனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கின் காரணமாக நடிகை ஸ்ரேயாவுக்கு அவரது கணவர் வீட்டுவேலைகளை செய்து கொடுத்தார்.இதனைத் தொடர்ந்து தனது கணவர் பாத்திரம் கழுவும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு போட்டிருந்தார் ஸ்ட்ரேயா. கூடவே இதேபோல் தமிஅக நடிகர்களும் வீட்டு வேலை செய்ய வேண்டும் எனவும் சவால் விட்டிருந்தார்.

இந்நிலையில் ஸ்ட்ரேயாவுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்துவந்த அவரது கணவருக்கு திடீரென வறட்டு இருமலும், காய்ச்சலும் வந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு ஸ்ட்ரேயா கணவரை அழைத்துப் போனார். அதன்பின் நடந்தவை குறித்து ஸ்ட்ரேயா என்ன சொன்னார் தெரியுமா? ஆனால் டாக்டர்கள் எங்களை ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறும்படி சொன்னார்கள். அவருக்கு கரோனா இல்லைஎன்றாலும் அங்கேயே இருந்தால் வந்துவிடும் எனச் சொன்னார்கள்.

இதனால் நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்தோம். இப்போது அவர் நன்றாக இருக்கிறார்.’என கூறியுள்ளார். இதனிடையில் ஸ்ட்ரேயா கணவர் இன்றுதன் பிறந்தநாளையும் கொண்டாடினார். அவருக்கும் ஸ்ட்ரேயா வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :