நல்லவான வாழ்வது சாத்தியமா...? ட்விட்டரில் கேள்வி எழுப்பும் இயக்குநர் சேரன்..! Description: நல்லவான வாழ்வது சாத்தியமா...? ட்விட்டரில் கேள்வி எழுப்பும் இயக்குநர் சேரன்..!

நல்லவான வாழ்வது சாத்தியமா...? ட்விட்டரில் கேள்வி எழுப்பும் இயக்குநர் சேரன்..!


நல்லவான வாழ்வது சாத்தியமா...? ட்விட்டரில் கேள்வி எழுப்பும் இயக்குநர் சேரன்..!

தமிழ்த்திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் சேரன். இவரது ஆட்டோகிராப் திரைப்படம் பலரது பால்யகால நினைவுகளை மீட்டெடுத்தது. முன்னதாக சொல்ல மறந்தகதை என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் சேரன். இது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய ‘தலைகீழ் விகிதங்கள்’ என்னும் நாவலைத் தழுவி, இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கியப் படமாகும்.

தொடர்ந்து சேரன் ஹீரோவாக நடித்தாலும் அதில் சிலபடங்கள் மட்டுமே நன்றாக போனது. இதனால் மார்க்கெட் இழந்த சேரன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதன்மூலம் மீண்டும் மீடியா வெளிச்சத்துக்கு வந்தார் சேரன். லாஸ்லியாவுக்கு தொடர்ந்து அட்வைஸ் செய்தே வந்ததால் பலரது மனதிலும் இடம் பிடித்தார் சேரன்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும், தொடர்ந்து ராஜாவுக்கு செக் என்னும் படத்தில் ஹீரோவாக மீண்டும் பீக்கிற்கு வந்தார் சேரன். இதில் சேரனுக்கு ஜோடியாக சராயூ மோகன் நடித்தார். கூடவே இந்த படத்தில் கணா காணும் காலங்கள் இர்பான், சிருஷ்டி டாங்கே, வர்மா ஆகியோரும் நடித்தனர். இந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

இந்நிலையில் கரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வரும் 3ம் தேதிவரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான சேரன் இதில் ஏழைமக்களின் துயரத்தை உணர்ந்து ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில் அவர், வாழ்க்கை பலகேள்விகளை முன்னெடுத்து வைத்துக்கொண்டே இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல...எல்லோருக்கும் பிரச்னைகள் எல்லாம் முடிந்தபின்னர் எத்தனை பேர் வறுமையிலும், பஞ்சத்திலும் வாடப் போகிறார்கள். வாழ்வாதாரம் எத்தகைய நெருக்கடிகளைத் தரப்போகிறது எல்லாருக்கும்... நல்லமனிதனாக வாழ்வது சாத்தியமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :