காற்று துகளில் எவ்வாறு கரோனா வைரஸ் பரவும் தெரியுமா...? விஞ்சானிகள் வெளியிட்ட வீடியோ..! Description: காற்று துகளில் எவ்வாறு கரோனா வைரஸ் பரவும் தெரியுமா...? விஞ்சானிகள் வெளியிட்ட வீடியோ..!

காற்று துகளில் எவ்வாறு கரோனா வைரஸ் பரவும் தெரியுமா...? விஞ்சானிகள் வெளியிட்ட வீடியோ..!


காற்று துகளில் எவ்வாறு கரோனா வைரஸ் பரவும் தெரியுமா...? விஞ்சானிகள் வெளியிட்ட வீடியோ..!

கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு,நாள் அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த உலகநாடுகளையும் அதன் தாக்கம் உலுக்கி வருகிறது. இப்படியான சூழலில் இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிக அளவில் உள்ளது. கொரனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களைக் காக்கும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க சமூக இடைவெளி மட்டுமே தீர்வு என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரானா வைரஸ் காற்றில் துகள்களை நீண்டநேரம் பரப்பும் என விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்நிலையில் விஞ்ஞானிகள் ஒருநபர் இருமும்போதும், தும்மும்போதும் கரோனா வைரஸ் மிகச்சிறிய தூசிப்படலம் எப்படி காற்றில் பரவுகிறது என 3டி மாதிரியை வெளியிட்டுள்ளனர்.

இதில் சூப்பர் மார்க்கெட்களில் உள்ள அலமாரிகளுக்கு இடையில் ஒருநபர் இருமுவதுபோல்காட்சியை மையமாக வைத்து விஞ்ஞானிகள் இதை 3டியாக உருவாக்கியுள்ளனர். அதில் இருமிய நபரைச்சுற்றி காற்றுத்துகள்கள் மேகம்போல் திரள்வதையும், பின்னர் அது கொஞ்சம், கொஞ்சமாக சிதறி மறைவதையும் அந்த வீடியோவில் காட்டுகிறார்கள். இதன்படி கொரனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் இருமிவிட்டு நகர்ந்து வேறு இடத்துக்கு போய்விடுகிறார்கள். ஆனால் இந்த துகள்கள் மற்றவர்களின் சுவாசக் குழாய்க்குள் சென்றுவிடுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.

வீட்டிலேயே இருப்பது ஒன்றுதான் கொரனா வைரஸை வீழ்த்துவதற்கான ஒரேவழி!


நண்பர்களுடன் பகிர :