தன்னை தாக்கிய இளைஞ்சர்களுக்கும் குடும்பம் இருக்கிறது.. மனம் உருகி வீடியோ வெளியிட்ட நடிகர் ரியாஸ்கான்..! Description: தன்னை தாக்கிய இளைஞ்சர்களுக்கும் குடும்பம் இருக்கிறது.. மனம் உருகி வீடியோ வெளியிட்ட நடிகர் ரியாஸ்கான்..!

தன்னை தாக்கிய இளைஞ்சர்களுக்கும் குடும்பம் இருக்கிறது.. மனம் உருகி வீடியோ வெளியிட்ட நடிகர் ரியாஸ்கான்..!


தன்னை தாக்கிய இளைஞ்சர்களுக்கும் குடும்பம் இருக்கிறது.. மனம் உருகி வீடியோ வெளியிட்ட நடிகர் ரியாஸ்கான்..!

நடிகர் ரியாஸ்கான் வில்லன், குணச்சித்திரம் என தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தில் நேர்த்தியாக நடிப்பவர். அதிலும் வின்னர் படத்தில் கட்டதுரையாக வடிவேலுவுடன் சேர்ந்து இவர் செய்யும் ரகளை பட்டி, தொட்டிஎங்கும் இவரை கொண்டு சேர்த்தது.

சினிமாவில் வில்லனாக ஜொலிக்கும் ரியாச்கான் அடிப்படையில் நல்ல குணத்துக்கும் சொந்தக்காரர். சென்னை ஆதித்யாராம் குடியிருப்பில் எட்டாவது தெருவில் வசித்து வரும் ரியாஸ்கான் அடிப்படையில் பாடிபில்டர். ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதைத் தொடர்ந்து படப்பிடிப்புகள் ரத்தானதால் வீட்டிலேயே இருக்கிறார் ரியாஸ்கான். கூடவே பாடி பில்டர் என்பதால் வீட்டு காம்பவுண்டை ஒட்டி நடைபயிற்சியும் செய்கிறார் ரியாஸ்கான்.

இந்நிலையில் அவர் வீட்டின் அருகில் பத்துபேர் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த ரியாஸ்கான் உரடங்கில் சமூக இடைவெளி இல்லாமல் இப்படி நிற்கிறீர்களே எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் காற்றுவாங்க நிற்கிறோம் எனச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு ரியாஸ்கான் அப்படியானால் வீட்டின் மொட்டை மாடியிலேயே நிற்கலாமே எனச் சொல்ல டென்சனான அவர்கள் ரியாச்கானை சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக ரியாஸ்கான் கானத்தூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்துள்ளார். அதுகுறித்து விசாரனை நடந்துவரும் நிலையில் நடிகர் ரியாஸ்கான் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னைத் தாக்கியவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது எனவும், அவர்கள் உடல்நலனைக் காக்கவே தான் அவ்வாறு சொன்னதாகவும் உருக்கமாகவும், அன்று நடந்தவைப் பற்றியும் பேசியிருக்கிறார்.

இதோ அந்த வீடியோவின் இனைப்பு..


நண்பர்களுடன் பகிர :