கொரனாவால் மூச்சுவிடவே சிரமப்படும் குழந்தை... மருத்துவர் வெளியிட்ட காணொளி... தயவு செய்து ஊரடங்கை மதியுங்கள்..! Description: கொரனாவால் மூச்சுவிடவே சிரமப்படும் குழந்தை... மருத்துவர் வெளியிட்ட காணொளி... தயவு செய்து ஊரடங்கை மதியுங்கள்..!

கொரனாவால் மூச்சுவிடவே சிரமப்படும் குழந்தை... மருத்துவர் வெளியிட்ட காணொளி... தயவு செய்து ஊரடங்கை மதியுங்கள்..!


கொரனாவால் மூச்சுவிடவே சிரமப்படும் குழந்தை... மருத்துவர் வெளியிட்ட காணொளி... தயவு செய்து ஊரடங்கை மதியுங்கள்..!

சீனாவின் வூகான் நகரில் இருந்து உருவான கொரனா வைரஸ் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உலுக்கி எடுத்து வருகிறது. உலக அலவில் 14 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரனா வைரஸ் தொற்றினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

கொரனா வைரஸால் இத்தாலி, அமெரிக்கா நாடுகள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்காணோர் கொரனா வைரஸினால் உயிர் இழந்து வருகின்றனர். இப்படியான சூழலில் நம் இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும்வகையில் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படியான சூழலில் அரசின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் சாலையில் சுற்றுவோர் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்களி வாகனங்களில் பறிமுதல் செய்யப்படுகிறது. கரோனா வைரஸ் குறித்து நம்மவர்களுக்கு இருக்கும் புரிதல்தான் இந்த பயமின்மைக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறத். இந்நிலையில் மருத்துவர் கார்த்திகேயன் என்பவர் கொரனா வைரஸ் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் குழந்தைகள் கொரனாவினால் மூச்சுவிட சிரமப்படுவது, தொடர்ந்து சுவாசக்குழாயை பொருத்தும்போது மனிதர்களுக்கு ஏற்படும் வலி ஆகியவற்றை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதையெல்லாம் பார்த்தேனும் வெளியில் வராதீர்கள் என அதில் விழிப்புணர்வும் ஊட்டுகிறார். இதோ அந்த வீடீயோவை நீங்களே பாருங்கள்..விழிப்படையுங்கள். தனித்திருப்போம். கரோனாவில் இருந்து தப்பிப்போம்..


நண்பர்களுடன் பகிர :