தன் ஆசை மகளையே அடிக்க கை ஓங்கிய நடிகர் சூரி... இந்த சம்பவத்திற்கு காரணம் என்ன தெரியுமா..? Description: தன் ஆசை மகளையே அடிக்க கை ஓங்கிய நடிகர் சூரி... இந்த சம்பவத்திற்கு காரணம் என்ன தெரியுமா..?

தன் ஆசை மகளையே அடிக்க கை ஓங்கிய நடிகர் சூரி... இந்த சம்பவத்திற்கு காரணம் என்ன தெரியுமா..?


தன் ஆசை மகளையே அடிக்க கை ஓங்கிய நடிகர் சூரி... இந்த சம்பவத்திற்கு காரணம் என்ன தெரியுமா..?

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் நகைச்சுவை நடிகர்களில் சூரியும் ஒருவர். இதுவரை காமெடியனாகவே நடித்துவந்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார்.

தமிழர்களுக்கு புரோட்டாவைப் பார்த்தாலே இப்போதெல்லாம் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா சூரியின் காமெடிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பரோட்டா சூரி இப்போது பேமஸ். ஆனால் மனிதரின் ஆரம்பகால வாழ்க்கை ரொம்பவே பரிதாபமானது. லாரியில் கிளீனராகக்கூட வேலைசெய்து பலகட்ட போராட்டங்களுக்கு பின்புதான் திரைத்துறையில் நுழைந்தார்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் வரும் 14ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிக்குள் இருக்கும் திரைப்பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சூரி முதலில் தன் மகனை பாத்ரூமில் குளிப்பாட்டிவிட்டு, டாய்லெட்டையும் கழுவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதன் தொடர்ச்சியாக இப்போது அடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தன் குழந்தைகளோடு சேர்ந்து கரோனா விழிப்புணர்வையும் ஊட்டுகிறார். குறித்த அந்த காட்சியின் முன்பகுதி பரோட்டா சூரிக்கே உரிய காமெடியாகவும், பின்பகுதி விழிப்புணர்வூட்டும் கருத்தாகவும் உள்ளது. இதோ குறித்த அந்த வீடியோவை நீங்களே பாருங்களேன்...


நண்பர்களுடன் பகிர :