ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிய நடிகை தேவயானி... மகள்களுடன் செய்த தரமான சம்பவம்..! Description: ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிய நடிகை தேவயானி... மகள்களுடன் செய்த தரமான சம்பவம்..!

ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிய நடிகை தேவயானி... மகள்களுடன் செய்த தரமான சம்பவம்..!


ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிய நடிகை தேவயானி... மகள்களுடன் செய்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரையுலகில் அழகான சிரிப்புக்கும், ஆபாசமே இல்லாத நடிப்புக்கும் சொந்தக்காரி தேவயானி. விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்தவர் தேவயானி. ஆர்ப்பாட்டமே இல்லாத மிக எளிமையான நபராக இப்போது உலா வந்து கொண்டிருக்கிறார்.

திரையுலகில் உச்சத்தில் இருந்த போதே இயக்குனர் ராஜகுமாரன் மீது காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தவர். தற்போது கணவர், மகள்கள் இனியா, பிரியங்காவோடு மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்து வருகிறார். அந்தியூர் தாலுகா, சின்னமங்கலம் கிராமத்தில் தோட்டத்தோடு கூடிய வீடு ஒன்றும் உள்ளது. பகுதிவாசிகளால் அந்த ஏரியா தேவயானி தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

இப்போது நாடு முழுவதும் கொரனா அச்சம் காரணமாகவும், அதன் பரவலைக் கட்டுப்படுத்தும்வகையிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் சின்னமங்கலம் கிராமத்தில் தோட்டத்தோடு கூடிய வீட்டில் குடும்பத்தோடு இருக்கும் தேவயானி, போர் அடிப்பதால் தன் மகள்கள் இனியா, பிரியங்காவோடு சேர்ந்த் சிலம்பம் படித்து வருகிறார்.

ஊரடங்கு காலத்தில் நேரத்தை இப்படி பயனுள்ள வழியில் செயல்படுத்தும் தேவயானிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


நண்பர்களுடன் பகிர :