முகக்கவசத்தில் கரோனா வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்வாழும் தெரியுமா? ஆய்வில் வெளியான தகவல்..! Description: முகக்கவசத்தில் கரோனா வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்வாழும் தெரியுமா? ஆய்வில் வெளியான தகவல்..!

முகக்கவசத்தில் கரோனா வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்வாழும் தெரியுமா? ஆய்வில் வெளியான தகவல்..!


முகக்கவசத்தில் கரோனா வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்வாழும் தெரியுமா? ஆய்வில் வெளியான தகவல்..!

கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் வீட்டுக்குள் இருந்தாலும் முகக்கவசம் அணிய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பொதுமக்களும் வீதியில் செல்லும்போது முகக்கவசத்துடன் சுற்றுகின்றனர். ஆனால் முகக்கவசத்தில் கரோனா வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்வாழும் என இப்போது தெரிய வந்துள்ளது.

ஹாங்காங் பல்கலைக்கழகம் இதுதொடர்பாக அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் முகக்கவசத்தில் கொரனா வைரஸ் 7 நாள்கள்வரை உயிர் வாழும் எனத் தெரியவந்துள்ளது. மேலும் ரூபாய் நோட்டு, எவர்சில்வர் பொருள்கள்,பிளாஸ்டிக் பொருட்கள் மீது சிலதினங்கள் உயிர் வாழும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கூடவே நாம் வீடுகளில் இயல்பாகவே பயன்படுத்தும் பளீச்சிங் பவுடர், சோப் உள்ளிட்ட கிருமிநாசினிகள் கொண்டே இந்த வைரஸை கொன்றுவிடலாம் எனவும் தெரியவந்துள்ளது. இதேபோல் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கிவீசும் டிசு பேப்பர், அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் இது மூன்றுமணிநேரம் உயிரோடு இருக்குமாம்.

இதனால்தான் முகக்கவசம் அணியும் நபர்கள் அதன் வெளிப்புறத்தில் தொடக் கூடாது எனவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. நண்பர்கள் அதைச் செய்யலாமே..


நண்பர்களுடன் பகிர :