ஊரடங்கால் நடந்த அதிசயம்... வெகுவாகக் குறைந்த காற்றுமாசு.. 213 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இமயமலை தெரியும் ஆச்சர்யம்.. புகைப்படம் உள்ளே...! Description: ஊரடங்கால் நடந்த அதிசயம்... வெகுவாகக் குறைந்த காற்றுமாசு.. 213 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இமயமலை தெரியும் ஆச்சர்யம்.. புகைப்படம் உள்ளே...!

ஊரடங்கால் நடந்த அதிசயம்... வெகுவாகக் குறைந்த காற்றுமாசு.. 213 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இமயமலை தெரியும் ஆச்சர்யம்.. புகைப்படம் உள்ளே...!


ஊரடங்கால் நடந்த அதிசயம்... வெகுவாகக் குறைந்த காற்றுமாசு.. 213 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இமயமலை தெரியும் ஆச்சர்யம்.. புகைப்படம் உள்ளே...!

இந்தியாவில் கரோனா அச்சத்தின் காரணமாகவும், அந்த வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலும் வரும் 14ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரனமாக பஸ், கார், ரயில் உள்ளிட்ட வாகனங்கள் கூட இயக்கப்படவில்லை. இதன் காரணமாக நடந்த ஒரு அதிசயம் பலராலும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரரில் இருந்து 213 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இமயமலையின்தவுலதார் மலைத்தொடர் . ஜலந்தரில் இருந்து பார்த்தால் முன்பெல்லாம் இமயமகையின் இந்த மலைத்தொடர் தெரியும். ஆனால் அதை இப்போதைய இளைஞர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.

25 ஆண்டுகளுக்கு முன்புவரை அதிகமாக கண்ணுக்கே தெரிந்த இந்த பனிமலை அண்மைக்காலமாக வெளியில் தெரியாமல் போனது. அதற்குக் காரணம் காற்றுமாசுதான். இப்போது ஊரடங்கின் காரணமாக வாகன போக்குவரத்து இல்லாததால் காற்று மாசு வெகுவாகக் குறைந்திருக்கிறது.

இதன் காரணமாக ஜலந்தர் நகரிலும் காற்ற் மாசு குறைந்துள்ளது. இதனால் ஜலந்தரில் இருந்தே இமயமலையின் இந்த மலைத்தொடர் தெரிகிறது. மக்கள் அதோடு கொண்டாட்டமாய் செல்பி எடுத்து சந்தோசம் அடைகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :