கரோனா பரவாமல் தடுக்க இரவு, பகலாக விழித்திருந்து உழைக்கும் தமிழகப் பெண்கள்.. எங்கு தெரியுமா? அப்படி என்ன செய்கிறார்கள் தெரியுமா..? Description: கரோனா பரவாமல் தடுக்க இரவு, பகலாக விழித்திருந்து உழைக்கும் தமிழகப் பெண்கள்.. எங்கு தெரியுமா? அப்படி என்ன செய்கிறார்கள் தெரியுமா..?

கரோனா பரவாமல் தடுக்க இரவு, பகலாக விழித்திருந்து உழைக்கும் தமிழகப் பெண்கள்.. எங்கு தெரியுமா? அப்படி என்ன செய்கிறார்கள் தெரியுமா..?


கரோனா பரவாமல் தடுக்க இரவு, பகலாக விழித்திருந்து உழைக்கும் தமிழகப் பெண்கள்..  எங்கு தெரியுமா? அப்படி என்ன செய்கிறார்கள் தெரியுமா..?

இந்தியாவிலும் கொரனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இப்படியான சூழலில் தமிழகத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுப் பெண்கள் கரோனா ஒழிப்புக்காக இரவு, பகலாக தங்களால் முடிந்த உழைப்பை செலுத்தி வரும் சம்பவம் அவர்களுக்கு வாழ்த்துகளை குவித்திருக்கிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள் கொரனா ஒழிப்பின் முக்கிய அம்சமாக பொதுமக்கள் முக உறை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதன் தேவையை கருத்தில்கொண்டு தமிழகம் முழுவதிலும் உள்ள சுய உதவிக்குழுப் பெண்கள் அதன் தயாரிப்பு பணிகளில் தீவிரம்காட்டி வருகின்றனர். இதற்கென்று சுய உதவிக்குழு பெண்களுக்கு பிரத்யேகப் பயிற்சிக் கொடுக்கப்பட்டு தினமும் ஒரு லட்சம் முகக்கவசம் வரை தயாரிக்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னையில் சுய உதவிக்குழுகளை ஒருங்கிணைக்கும் பெண் ஒருவர் கூறும்போது, ‘தினசரி ஒருலட்சம் பேஸ் மாஸ்க் தயாரிக்கிறோம். அரசுக்கும் சப்ளை செய்கிறோம். கடை திறந்திருக்கும் நேரத்தில் இதற்கான பொருள்களை வாங்குகிறோம். பருத்தி துணியில் முகக்கவசம் செய்யும் பெண்களுக்கு ஒருநாளைக்கு 600 ரூபா முதல் ஆயிரம்ரூபாய் வரை சம்பளமாக கிடைக்கிறது.

சிலர் வீடுகளிலும், சிலர் நேரடியாக சுய உதவிக்குழுவுக்கு போயும் தைக்கின்றனர். ஒரு பருத்தி முகக்கவசத்தை 8 ரூபாயில் இருந்து 10 ரூபாய்வரை விற்கிறார்களாம். இந்த இக்கட்டான நேரத்திலும் நமக்காகவே ஓய்வின்றி மாஸ்க் தைத்துக் கொண்டே இருக்கும் இந்த பெண்களை வாழ்த்துவோம்.


நண்பர்களுடன் பகிர :