ஹோட்டல் நடத்தும் பரோட்டா சூரி.. ஊழியர்களுக்கு செய்த தரமான சம்பவம்.. சிலிர்க்கவைக்கும் சூரியின் மனிதநேயம்..! Description: ஹோட்டல் நடத்தும் பரோட்டா சூரி.. ஊழியர்களுக்கு செய்த தரமான சம்பவம்.. சிலிர்க்கவைக்கும் சூரியின் மனிதநேயம்..!

ஹோட்டல் நடத்தும் பரோட்டா சூரி.. ஊழியர்களுக்கு செய்த தரமான சம்பவம்.. சிலிர்க்கவைக்கும் சூரியின் மனிதநேயம்..!


ஹோட்டல் நடத்தும் பரோட்டா சூரி.. ஊழியர்களுக்கு செய்த தரமான சம்பவம்.. சிலிர்க்கவைக்கும் சூரியின் மனிதநேயம்..!

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் நகைச்சுவை நடிகர்களில் சூரியும் ஒருவர். இதுவரை காமெடியனாகவே நடித்துவந்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார்.

தமிழர்களுக்கு புரோட்டாவைப் பார்த்தாலே இப்போதெல்லாம் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா சூரியின் காமெடிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பரோட்டா சூரி இப்போது பேமஸ். ஆனால் மனிதரின் ஆரம்பகால வாழ்க்கை ரொம்பவே பரிதாபமானது.

இதுகுறித்து பரோட்டா சூரி ஒருமுறை, ‘குடும்பத்துல ரொம்ப கஷ்டம். அப்போதான் சென்னைக்கு போனா சினிமாவுல நல்லா சம்பாதிக்கலாம்ன்னு நினைச்சு வந்தேன். யாரும் சினிமாவில் சின்ன வேலைகூட கொடுக்கல. இதனால தங்கி இருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க மண் அள்ளும் லாரியில் கிளீனரா வேலை செஞ்சேன். அம்மா ஒருநாளு போன் போட்டாங்க. சாப்பிட்டியாப்பான்னு கேட்டாங்க. நான் தண்ணியை மட்டும் குடிச்ச்ட்டு படுத்திருக்கேன்னு சொன்னேன். அம்மா அதைக் கேட்டதும் மயங்கிட்டாங்க..’என சொல்லியிருந்தார் சுரி.

வாழ்வில் அடிமட்டத்தில் இருந்து வந்ததால் அதன் வலியை நன்றாக உணர்ந்திருக்கும் சூரி, அதை தன் வாழ்வில் செயல்படுத்தவும் செய்திருக்கிறார். சூரிக்கு சொந்தமாக ஹோட்டல் இருக்கிறது. அதில் ஏராளமான வேலை செய்கின்றனர். இவர்களுக்கு கொரனா ஊரடங்கின் காரணமாக வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு உணவகங்களில் பார்சல் மட்டும் கொடுக்கலாம் என அறிவித்தாலும் சூரி தன் ஊழியர்கள் நலன் கருதி அவர்களுக்கு லீவே கொடுத்துவிட்டார். கூடவே முழுச் சம்பளத்தையும் கொடுத்து!

இதுபோக வறுமையில் வாட்ம் நாடக நடிகர்களுக்கு நடிகர் சங்கம் மூலம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். சூரியின் இந்த மனிதநேயம் அவரது ஊழியர்களை கண்கலங்க வைத்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :