தமன்னா தமிழ் பேசி பார்த்திருக்கிறீர்களா? அழகுத் தமிழில் கரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தமன்னா..! Description: தமன்னா தமிழ் பேசி பார்த்திருக்கிறீர்களா? அழகுத் தமிழில் கரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தமன்னா..!

தமன்னா தமிழ் பேசி பார்த்திருக்கிறீர்களா? அழகுத் தமிழில் கரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தமன்னா..!


தமன்னா தமிழ் பேசி பார்த்திருக்கிறீர்களா? அழகுத் தமிழில் கரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தமன்னா..!

தமிழ்த்திரையுலகில் அதிக அளவில் ரசிகர்களை கொண்டவர் தமன்னா. விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம் என தமிழ்த்திரைஉலகின் முண்ணனி நடிகர்கள் அனைவருக்குமே ஜோடியாக நடித்து இருக்கிறார் தமன்னா.

தமன்னாவின் படங்களுக்கு ரசிகர் படையும் அதிகம் உண்டு. அதிலும் பாகுபலி படத்தில் தமன்னாவின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அதில் ஏற்ற பாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்து இருந்தார் தமன்னா. இப்போது தமன்னா தெலுங்கு படம் ஒன்றில் நடித்து முடித்திருக்கிறார்





தமன்னாவுக்கு தமிழ்படங்களில் சொந்தக்குரல் கிடையாது. வேறு ஒரு பெண்ணே தமன்னாவுக்கு வாய்ஸ் கொடுத்து வந்தார். தமன்னா கடந்த 2005ம் ஆண்டு இந்திப்படம் மூலமே அறிமுகம் ஆனார். பிரபுதேவாவுடன் சேர்ந்து தமன்னா நடித்த ‘தேவி’ படம் அவருக்கு நல்லபெயரை கொடுத்தது. அதேநேரம் தமன்னா, விஷாலுடன் சேர்ந்து நடித்த ஆக்‌ஷன் படம் ஊத்திக்கொண்டது.





இந்நிலையில் நடிகை தமன்னா இப்போது கரோனா விழிப்புணர்வு ஊட்டும் விதமாக வீடியோ ஒன்றைபேசி வெளியிட்டுள்ளார். அதில் தமன்னா அழகாக தமிழ் பேசுகிறார். 33 நொடிகள் கொண்ட அந்த வீடியோவின் இறுதியில் விலகிநின்று ஒன்றிணைவோம்..கரோனா வைரஸை வெல்வோம் என அழகாக தமிழில் பஞ்ச் பேசி முடித்துள்ளார் தமன்னா. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :