சீனர்கள் அனைத்து வகை பிராணிகளையும் சாப்பிடுவது ஏன் தெரியுமா? நெஞ்சை உருக்கும் ஒரு சோகக் கீதம்..! Description: சீனர்கள் அனைத்து வகை பிராணிகளையும் சாப்பிடுவது ஏன் தெரியுமா? நெஞ்சை உருக்கும் ஒரு சோகக் கீதம்..!

சீனர்கள் அனைத்து வகை பிராணிகளையும் சாப்பிடுவது ஏன் தெரியுமா? நெஞ்சை உருக்கும் ஒரு சோகக் கீதம்..!


சீனர்கள் அனைத்து வகை பிராணிகளையும் சாப்பிடுவது ஏன் தெரியுமா? நெஞ்சை உருக்கும் ஒரு சோகக் கீதம்..!

ஒட்டுமொத்த உலக நாடுகளையும் கொரோனா அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. சீனாவில் துவங்கிய கொரனா வைரஸின் பாதிப்பு இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளையும் உலுக்கி எடுத்துவருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கொரானா தாகுதலுக்கு இதுவரை இரண்டாயிரத்தும் அதிகமானோர் ஆளாகி இருக்கின்றனர். தமிழகத்திலும் இதுவரை கொரனாவுக்கு ஐந்துபேர் உயிர் இழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இப்போத் பதினான்கு லட்சத்தை தாண்டி இருக்கிறது.கொரானா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை, சுகாதாரத்துறை ஆகியவையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.உலக அளவில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் உயிர் இழந்திருக்கும் நிலையில் சீனர்கள் அனைத்துவகையான பிராணிகளையும் சாப்பிட்டதால்தான் அதன் மூலமே கரோனா வைரஸ் பரவியதாகவும் கருத்து பரவியது.

ஆனால் சீனர்கள் இப்படி அனைத்து பிராணிகளையும் சாப்பிடத் தொடங்கியதன் பின்னால் வலி நிறைந்த வாழ்க்கை இருக்கிறது. 1970களில் சீனாவில் கடுமையான பஞ்சம் நிலவியது. அவர்களின் அன்றாட உணவுத்தேவையைக் கூட சீன அரசால் பூர்த்தி செய்ய முடியவில்லை. சாப்பிட வழியின்றி மூன்றுகோடிக்கும் மேலான மக்கள் பசியால் இறந்தனர்.

அப்போதுதான் சீனாவின் வூகான் நகரில் அங்குள்ள மக்கள் சேர்ந்து மார்க்கெட் ஒன்றைத் துவங்கினர். அந்த மார்க்கெட்டில் காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்பனைக்கு எடுத்துச்செல்ல துவங்கினர். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைப் பார்த்த சீன அரசு, அம்மக்களுக்கு வன உயிரினங்களை வேட்டையாடவும் அனுமதித்தது.

இந்த மார்க்கெட் சீன அரசுக்கு ஒருலட்சம் கோடி ரூபாய் வருமானத்தையும் பெற்றுத் தந்தது. சீனர்கள் சகல பிராணிகளையும் சாப்பிடத் தொடங்கியதன் பின்னால் இப்படியொரு சோக கீதம் இருக்கிறது.


நண்பர்களுடன் பகிர :